பாடல் வரிகளை பார்த்து அசந்துபோன கண்ணதாசன்!.. அப்பவே கெத்து காட்டிய டி.ராஜேந்தர்...

by சிவா |
kannadasan
X

T Rajendar: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தன்னம்பிக்கை நாயகனாக வலம் வந்து ஜெயித்தும் காட்டியவர் டி.ராஜேந்தர். கல்லூரியில் படிக்கும்போதே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். ஏனெனில், சொந்தமாக டியூன் போட்டு பாடல் வரிகளை எழுதி வகுப்பு அறையில் இருக்கும் டேபிளில் தாளம் தட்டி எல்லோரையும் ரசிக்க வைத்தவர்.

கவிதை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, கலை, இசை, எடிட்டிங் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்தவர் இவர். கல்லூரி படிப்பிக்கு பின் ‘ஒருதலை ராகம்’ என்கிற காதல் கதையை எழுதினார். கஷ்டப்பட்டு போராடி ஒரு தயாரிப்பாளரை பிடித்து அப்படத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் மீது சந்தேகப்பட்ட பந்துலு… ஆனா நடந்ததே வேற… பின்ன கவியரசர்னா சும்மாவா?…

அப்படத்தை அவர் இயக்கிய போது பல போராட்டங்களையும் சந்தித்தார். படம் வெளியாகி ஒரு வாரம் தியேட்டரில் கூட்டமில்லை. அதன்பின் வாய்வழி விமர்சனங்களால் இப்படம் ரசிகர்களிடம் சென்றடைந்து 100 நாட்கள் ஓடி ஹிட் அடித்தது. அதன்பின், மைதிலி என்னை காதலி, உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி என பல ஹிட் படங்களை இயக்கி நடித்தார்.

இளையராஜா கோலோச்சிய அந்த நேரத்தில் டி.ராஜேந்தரின் இசைக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. அவர் படங்களின் கேசட்டுக்கள் தாறுமாறாக விற்பனை ஆகும். ஒரு கட்டத்தில் டி.ராஜேந்திரின் படங்கள் ரஜினி படங்களுக்கே போட்டியாக மாறியது. ஒருமுறை ரஜினி படம் ரிலீஸ் ஆனபோது டி.ராஜேந்தர் படமும் வெளியாக ரஜினியே டி.ஆரை தொடர்புகொண்டு ‘உங்கள் பட ரிலீஸை தள்ளிவைக்க முடியுமா?’ என கேட்டார்.

இதையும் படிங்க: இது என்ன பாட்டு?!.. அவமானப்படுத்திய நடிகை!… பாட்டு மூலம் திமிரை அடக்கிய கண்ணதாசன்…

இப்போது டி.ஆரின் மகன் சிம்பு சினிமாவில் கலக்கி வருகிறார். அப்பாவுக்கு இருந்தது போலவே சிம்புவுக்கும் இப்போது தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. எவ்வளவு சர்ச்சையில் சிக்கினாலும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். டி.ராஜேந்திர் எழுதி பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசனே பாராட்டியிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!.

ஆனால், அது உண்மையில் நடந்தது. அவர் முதலில் இயக்கிய ஒருதலை ராகம் படத்தில் வரும் ‘வாசமில்லா மலரிது.. வசந்தத்தை தேடுது’ பாடலின் வரிகளை கேட்ட கண்ணதாசன் ‘இந்த பாடல் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது’ என பாராட்டினாராம்.

இதையும் படிங்க: சினிமாவிற்கு முழுக்கு போட்ட பத்மினி…. தனது பாடல் மூலம் பழி வாங்கிய கண்ணதாசன்…

Next Story