காமெடி நடிகரால் வீதிக்கு வந்த கண்ணதாசன்!.. பல பேர் சொல்லியும் கேட்கலயே!...

கவிப்பேரசு கண்ணதாசன் தனது பாடல்களின் மூலம் வெற்றி வலம் வந்தவர். பல புத்தகங்கள் எழுதி நூல்களை வெளியிட்டும் சாதனை கண்டவர். தொட்டதெல்லாம் வெற்றி என தனது கடின உழைப்பால் தன்னை ஒரு சகாப்தமாக மாற்றிய புத்திக்காரருமே இவர்.

இப்படிப்பட்ட வண்ணமயமான வாழ்வை வாழ்ந்து வந்த கண்ணதாசன் தனது வாழ்வில் சந்தித்த துயரமான சம்பவம் ஒன்றினை பிரபல தயாரிப்பாளரும், விமர்சகருமான "சித்ரா" லட்சுமணன் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். பாடல்கள் எழுதுவதோடு தனது சினிமா வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என விரும்பிய அவர் படங்களை தயாரிக்க துவங்கினார். அங்குதான் அவருக்கு ஏழரை துவங்கியது.

இதையும் படிங்க: வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..

"வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்திற்கு போட்டி என உண்மைக்கு மாறான கருத்தோடு தயாரான படம் "சிவகங்கை சீமை". எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இயக்குனர் பீம்சிங் சிவாஜியை வைத்து ஒரு படத்தை கண்ணதாசனுக்காக எடுத்துத்தர முன்வர அதை அவர் மறுத்துவிட்டார்.

கண்ணதாசனோ சந்திரபாபுவை வைத்து "கவலை இல்லாத மனிதன்" என்ற தனது அடுத்த படத்தை தயாரித்தார். நடவடிக்கைகளில் தனது பெயரை கெடுத்துக்கொண்ட சந்திரபாபுவை நம்பி பணத்தை விதைக்க வேண்டாம் என பலரும் அறிவுறுத்த, அதையெல்லாம் காதில் வாங்காமல் கண்ணதாசன் படத்தை முடிப்பதிலேயே மும்மூரம் காட்டி வந்திருக்கிறார்.

chandra babu

பலர் சொல்லியும் கேட்காமல் தனது முடிவை மட்டுமே நம்பியிருந்த கவிஞரை படபிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் தலைவலிகொடுக்க துவங்கினார் சந்திரபாபு. படத்தில் நடித்த டி.எஸ்.பாலையா, எம்.ஆர்,ராதா உள்ளிட்ட அனைரும் வருந்தும் விதமாகவே நடந்து வந்திருக்கிறார் படத்தின் நாயகன் சந்திரபாபு. பல போரட்டங்களுக்கு பிறகு வெள்ளித்திரையை வந்தடைந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

இதனால் மிகப்பெரிய கடனாளி ஆன கண்ணதாசன் பாடல்களை எழுதி அதில் வந்த பணத்தினை கொண்டு வட்டி கட்டி வந்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். மேலும் கடனை அடைப்பதற்காக கண்ணதாசன் வீட்டு வாசலில் நின்றிருந்த பதினோறு கார்களில் பத்து கார்களை கடன் கொடுத்தோரின் வீட்டில் நிறுத்தச்சொல்லிவிட்டாராம் கவிப்பேரசு.

இத்துயரம் மிக்க சம்பவத்தைதான் தான் எழுதிய நூல் ஒன்றில் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். தனது நெருங்கிய நண்பரும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வீட்டு வாசலில் கூட தான் காத்திருந்தது கிடையாது என குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, ஆணவம் மனிதனை கொன்று விடும் எனவும், தான் செய்து வரும் தொழிலை சரியாக கவனிக்க தெரியாத எவருடனும் வெற்றி தொடர்ந்து தங்கியதில்லை எனவும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.

 

Related Articles

Next Story