என்ன நான் சொன்னதையே சொல்றாரு… கண்ணதாசன் செயலால் ஆடி போன கங்கை அமரன்!..
தமிழ் சினிமாவில் பல துறைகளில் சாதனைகளை புரிந்த பிரபலங்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தமிழ் சினிமாவில இளையராஜா போன்று இசையமைப்பதில் மட்டும் கில்லாடியாக இல்லாமல் திரைப்படங்களை இயக்குவது, பாடல் வரிகள் எழுதுவது, என பல துறைகளிலும் சிறந்து விளங்கினார் கங்கை அமரன்.
அவர் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் அப்பொழுது ஒரு வருடம் வரை ஓடி வெற்றி கொடுத்த திரைப்படம் ஆகும். அதேபோல இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு கங்கை அமரனும் இளையராஜாவிற்கு உதவி செய்துள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் பாடலாசிரியராக வேண்டும் என்பதே கங்கை அமரனின் பெரும் கனவாக இருந்தது. இதற்காக பலமுறை கவிஞர் கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் கங்கை அமரன். ஆனால் கண்ணதாசன் அப்பொழுது அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
கண்ணதாசன் பாடிய வரிகள்:
பிறகு இளையராஜா மூலமாக சினிமாவிற்கு வந்த பிறகு கங்கை அமரன் பாடல் எழுதுவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.இந்த நிலையில் 1973 இல் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு என்கிற திரைப்படத்திற்கு பாடல் வரிகள் எழுத வேண்டி இருந்தது.
அப்பொழுது அதற்கு இசை அமைத்த ஜிகே வெங்கடேஷிடம் கங்கை அமரன் பழக்கத்தில் இருந்தார். அப்போது ஒரு இசையை இசையமைத்த வெங்கடேஷ் இதற்கு என்ன வரி போடலாம் என கேட்ட பொழுது நேரம் இரவு நேரம் என்கிற அந்த பாடலின் இரண்டு வரிகளை கூறினார் கங்கை அமரன்.
பிறகு அதே இசையை கண்ணதாசனிடம் இசையமைத்த பொழுது அவரும் அதே பாடல் வரியை கூறினார். இது கங்கை அமரனுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது எப்படி நாம் கூறிய அதே பாடல் வரியை கண்ணதாசன் கூறுகிறார் என்று வியந்துள்ளார். இந்த விஷயத்தை அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.