Cinema News
கண்ணதாசன் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்திய பாடல்!.. கவிஞர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கா!..
Kannadasan: 1950,60களில் கவித்துவம் மிக்க, கருத்துமிக்க பல திரைப்பட பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கும் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் பாடல், சிவாஜி பாடல் என சொல்வது போல கண்ணதாசன் பாடல் என சொல்லும் அளவுக்கு அவரின் பாடல்கள் ரசிகர்களிடம் சென்றடைந்தது. காதல், தத்துவம், சோகம், ஆன்மிகம், விரக்தி என எல்லாவற்றையும் தனது பாடல்களில் எழுதினார் கண்ணதாசன்.
இதையும் படிங்க: தன்னை நடுத்தெருவில் நிறுத்திய சந்திரபாபுவுக்கு கண்ணதாசன் செய்த உதவி!. அட பெரிய மனசுதான்..
பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், அரசியல் என இறங்கியதில்தான் அவர் கடனாளியாக மாறினார். திமுக, காங்கிரஸ் என சில கட்சிகளுக்கு போனார். அரசியலுக்காக நிறைய செலவும் செய்தார். இதில் கடனாளியாக மாறி சில சொத்துக்களை விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.
ஒருமுறை அவரின் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அவரிடம் பணம் இல்லை. அப்போதுதான் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான நெஞ்சிருக்கும் வரை படத்திற்கு பாடல்களை எழுதுவதற்காக கண்ணதாசன் சென்றார். திருமணம் செய்து கொள்ளப்போகும் கே.ஆர்.விஜயாவை பார்த்து சிவாஜி பாடும் பாடல் அது.
இதையும் படிங்க: கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…
தன் மகளை நினைத்து பாடல்களை எழுதிய கண்ணதாசன் ‘பூ முடித்தால் இந்த பூங்குழளி’ என பல்லவரி எழுதினார். அந்த பாடலில் அற்புதமான வரிகளை எழுதியிருந்தார். டி.எம்.எஸ் பாடிய அந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்துப்போக வீட்டில் அந்த பாட்டை ஒலிபரப்பி கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். அந்த பாடல் உருவாக்கிய அதிர்வலைகள் நன்றாகவே வேலை செய்தது.
அவரின் மகளுக்கு உடனே ஒரு மாப்பிள்ளை கிடைத்தது. அதோடு, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரிடமிருந்தும் அவருக்கு பணம் வந்தது. அதன்மூலம் திருமணத்தை செய்து முடித்தார் கண்ணதாசன். இதுபற்றி கண்ணதாசன் ஒரு புத்தகத்தில் எழுதியபோது இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு ‘நல்லதை பேசுங்கள்.. நல்லதை எழுதுங்கள்.. நல்லதை கேளுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும். எனக்கும் நடந்தது’ என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினியை ஒதுக்கிய திரையுலகம்.. கைகொடுத்து தூக்கிவிட்ட கண்ணதாசன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..