கண்ணதாசன் எப்பேர்பட்ட கவியரசராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற கண்ணதாசனை குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு தவறான கருத்தை பதிவுசெய்திருந்தாராம். அதற்கு கண்ணதாசன் கொடுத்த தரமான பதிலடி குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1965 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் “திருவிளையாடல்”. இத்திரைப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதில் இடம்பெற்ற “பாட்டும் நானே பாவமும் நானே” என்று ஒரு பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாக விளங்கியது. இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். ஆனால் இந்த பாடலை கண்ணதாசன் எழுதவில்லை எனவும், இந்த பாடலை கா.மு.ஷெரிப் என்ற கவிஞர் எழுதினார், ஆனால் கண்ணதாசன் தனது பெயரை போட்டுக்கொண்டார் எனவும் எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். இதனை தொடர்ந்து ஜெயகாந்தன் எழுதியதை பலரும் நம்பி அந்த பாடலை கா.மு.செரிப்தான் எழுதியிருக்கிறார் என பேசத்தொடங்கிவிட்டனராம்.
இதனை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையில் இதற்கு பதிலளித்த கண்ணதாசன் “பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை நான் சொல்ல சொல்ல, ஏ.பி.நாகராஜனின் உதவியாளர் சம்பத் ஐயங்கார் எழுதினார். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அப்போது எங்களுடன் இருந்த மேனேஜர் வைத்தியநாதன் என்பவர் உயிரோடுதான் இருக்கிறார். இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் அவரது உறவினர்களும் உயிரோடத்தான் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டு அவர்களிடமே தாராளமாக கேட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தாராம்.
மேலும் அந்த பத்திரிக்கையில் எழுத்தாளர் ஜெயகாந்தனை குறித்து எழுதும்போது “என்ன பேசுகிறோம், என்ன எழுதுகிறோம் என்ற விவஸ்தையே இல்லாமல் பேசுவதும் எழுதுவதும் ஜெயகாந்தனின் வாடிக்கை” என்று அவரை கண்ணதாசன் கடுமையாக அதில் விமர்சித்தும் உள்ளார்.
இதையும் படிங்க: கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி… நாடக மேடையில் ஒரு துயர சம்பவம்…
Kanguva: சூர்யா…
குபேரா திரைப்படத்தின்…
வணிக ரீதியாக…
காக்க காக்க…
Amaran: சிவகார்த்திகேயன்…