கருணாநிதி கதையை காபி அடித்த கண்ணதாசன்… ஆனா கடைசியில் கலைஞரைதான் பாதிச்சது!..

by Rajkumar |
கருணாநிதி கதையை காபி அடித்த கண்ணதாசன்… ஆனா கடைசியில் கலைஞரைதான் பாதிச்சது!..
X

தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளை காப்பியடிப்பது என்பது இன்று நேற்று என்று இல்லாமல் பல காலங்களாகவே இருந்து வருகின்றன. அதேபோல ஒரே கதையை கொண்டு பல படங்களை இயக்கும் நிலையும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது முனி, அரண்மனை போன்ற திரைப்படங்களை பார்க்கும் பொழுது அதில் ஒரே கதையை கொண்டு கதாநாயகர்களை மட்டும் மாற்றி மாற்றி அடுத்தடுத்த பாகங்கள் வருவதை பார்க்க முடியும்.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் வெளி மொழிகளில் உள்ள படங்கள் நல்ல ஹிட் கொடுக்கும் பட்சத்தில் அவற்றை தமிழில் எடுக்கும் வழக்கம் அப்போதே இருந்தது. ஆனால் தமிழ் மொழியில் இருந்த கதையையே மீண்டும் படமாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. அதை கண்ணதாசன் செய்துள்ளார்.

அப்போதைய காலக்கட்டத்தில் கருணாநிதி பிரபலமான கதையாசிரியராக இருந்தார். அவர் திரைக்கதை வசனம் எழுதும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் ஹிட் கொடுத்தன. அந்த சமயத்தில் கண்ணதாசன் சுகமங்கை என்கிற ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனம் இரண்டையும் எழுதினார்.

உண்மையில் இந்த சுகமங்கை என்கிற திரைப்படத்தின் கதை கருணாநிதியோடது. ஏற்கனவே அந்த கதையை கொண்டு அவர் அம்மையப்பன் என்கிற நாடகத்தை எஸ்.எஸ். ஆரை வைத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த கதையை காபி அடித்து கொஞ்சம் மாற்றம் செய்த கண்ணதாசன் அதை சுகமங்கை திரைப்படமாக வெளியிட்டார்.

படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இதனால் கோபமான கருணாநிதி அந்த கதையை அவரும் படமாக்கினார். அம்மையப்பன் என்கிற பெயரிலேயே இந்த படம் வெளியானது. ஆனால் அம்மையப்பன் பெரும் தோல்வியை கண்டது. கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட இந்த நிகழ்வு காரணமாக இருந்தது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: படம் ஹிட்டு.. ரிலீஸ்க்கு முன்பே சிவகார்த்திகேயன் பட ரிசல்ட்டை சொன்ன மிஷ்கின்!

Next Story