Cinema History
நினைத்தது வரவில்லை!.. போராடிய இயக்குனர்!.. களத்தில் இறங்கி அசால்ட் பண்ண கண்ணதாசன்!..
யதார்த்த வாழ்வை எடுத்துரைக்கும் பாடல் வரிகள், தனக்கென ஒரு “பாணி” இதுவே கவிஞர் கண்ணதாசன், சிந்தனையை தூண்டும் வார்த்தைகளின் கோர்வை, துள்ளலான வரிகள் இவையுமே அவரது வெற்றிக்கு காராணம். அவரது திறமைக்கு சவால் விட்ட தருணங்களை அவர் கையாண்ட விதம், இவரை வானளாவிய புகழுக்கு கொண்டும் சென்றது.
“ஆதிபராசக்தி” படத்தில் வரும் மணியே, மணியின் ஒலியே’ பாடலை உருவாக்க கண்ணதாசன் கையாண்ட யுக்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது, சரபோஜி மன்னரிடம் சவால் விட்டு “அமாவாசை” தினத்தன்று முழு நிலவை தெரியவைத்த “அபிராமி” பட்டர் என்ற சுப்பிரமணிய ஐயரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக வைத்து இப்படம் உருவானது. அந்த படத்தின் முக்கிய காட்சியில் ஒரு பாடலை வைக்க படக்குழு திட்டமிட்டது.
இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!
கே.எஸ்.கோபால கிருஷ்னண் இயக்கத்தில், கே.வி.மஹாதேவன் இசையில் பாடல் ஒன்றை எழுத ஒரு பாடலாசிரியர் முடிவு செய்யப்பட்டார். ஆனால் அவரின் வரிகளில் இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, எதிர்பார்த்த உணர்வை சரியாக வெளிப்படுத்த கண்ணதாசனால் மட்டுமே முடியும் என சொல்லி அவர் வரவழைக்கப்பட்டார். அப்படி கண்ணதாசன் எழுதிய வரிகள் இன்று வரை புகழப்பட்டு வருகிறது.
அபிராமி அந்தாதி பாடலை படத்தில் வைக்க முயற்சிக்க, அது பொருந்தாமல் போனதும் சோகமான இயக்குனர் கண்ணதாசனால் மட்டுமே இந்த சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை வைத்து பாடல் எழுத முடியும் என முடிவெடுத்தார். இயக்குனரின் எண்ண ஓட்டத்தை வரிகளாக கொண்டுவந்தோடு மட்டுமல்லாமல் பாமரனும் கேட்டு ரசிக்கும் விதத்தில் பாடலை சிறப்பாக எழுதினார் கண்ணதாசன்.
இதையும் படிங்க: வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..
பாரதியாரின் பாடலில் வரும் சொல்லடி சிவசக்தியை வைத்து ‘சொல்லடி அபிராமி’ என பல்லவி எழுதி விட்டார். குற்றால குறவஞ்சி பாடலில் ஒலித்த கலின்,கலின், ஜெயம்,ஜெயம் போன்ற வரிகள் மற்றும் அபிராமிபட்டர் எழுதிய “அபிராமி அந்தாதி” பாடல் வரிகள் ஆகியவற்றை இடை இடையே வைத்து கண்ணதாசன் எழுதி பாடல்தான் ‘மணியே மணியின் ஒலியே’, ‘வானில் சுடர் வருமோ?, எனக்கு இடர் வருமோ? சொல்லடி அபிராமி’ என்ற பாடல்.
அந்த பாடல் இயக்குனர், படக்குழு, ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் திருப்தி அடைய வைத்ததோடு மட்டுமில்லாமல் இன்றும் காற்றில் ஒலித்துக்கொண்டும் இருக்கிறது.