கவிஞன்னா இவன்தான்யா கவிஞன்... என்னம்மா எழுதிருக்காரு? கடனுக்கு எழுதிய கண்ணதாசன் பாடல்

kannadasan
1963ல் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் பழனி. இந்தப் படத்துக்கு கவிஞர் கண்ணதாசன்தான் பாடல்கள் எழுதினார். அந்த நேரம் கண்ணதாசனுக்கு பணநெருக்கடி. அவர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் உடனடியாக செலவழித்து விடுவாராம்.
ஒரு முறை அவங்க சொந்தக்காரங்ககிட்ட தீபாவளி செலவுக்கு பணம் கேட்டுள்ளார் கண்ணதாசன். அப்போது அவங்க இல்லைன்னு முகத்தில் அடிச்சாமாதிரி சொல்லிட்டாங்களாம். அதனால் கவிஞருக்கு மனவருத்தம். 'அண்ணன், தம்பிகளே இல்லைன்னு சொல்லிட்டாங்களே'ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்காரு. அந்த சமயத்துல பீம்சிங்கிடம் இருந்து போன் வருது.
'அண்ணேன் பழனி படத்து பாடல்களுக்காக உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம்'னு சொல்றாங்க. அதனால எம்எஸ்வி.யோட கம்போசிங் ரூமுக்கு கவிஞர் பாடல் எழுதப் போறாரு. அப்போ 'அண்ணே உங்களுக்குப் பிடிச்ச வெளிநாட்டு சரக்கு வந்துருக்கு'ன்னு ரூம் பாய் ஒருவர் கண்ணதாசனிடம் சொல்கிறார். அது அவ்ளோ சீக்கிரத்துல யாருக்கும் கிடைக்காது. சினிமா பிரபலங்களுக்குத்தான் கிடைக்கும். அந்த சமயத்துல கவிஞரிடம் பணம் இல்லாததால எம்எஸ்வி.யிடம் கேட்கிறார்.

pazhani kannadasan
அவரும் பணம் கொடுத்தா கவிஞரைக் கையில பிடிக்க முடியாதுன்னு 'அண்ணே... எங்கிட்ட காலணா இல்லை. எல்லாம் அம்மாகிட்ட கொடுத்துடுவேன்'னு சொல்லி விட்டாராம். அப்புறம் என்ன பாட்டு எழுதணும்னு கேட்டுள்ளார் கண்ணதாசன். பாடலுக்கான சிச்சுவேஷனை பீம்சிங் சொல்றாரு. அதுல சிவாஜியின் சூழல்தான் நமது சூழல்னு கண்ணதாசன் நினைக்கிறார். அதுதான் 'அண்ணன் என்னடா தம்பி என்னடா' பாடல்.
அதைப் பாடியவர் டிஎம்எஸ். அற்புதமான பாடல். மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலில் 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே'ன்னு எழுதி இருந்தார் கண்ணதாசன். இந்தப் பாடலின் சரணத்தில் கவிஞர் எழுதிய எல்லா வரிகளும் அனுபவப்பூர்வமானவை.
இந்த உலகத்தில் உறவு என்பதும் அதனால் வரும் துன்பங்களும் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றும் அதற்கான தீர்வையும் பாடலில் அருமையாக எழுதி இருந்தார் கண்ணதாசன். அதே பாடலில் கூடப்பிறந்தவன் மட்டும் அண்ணன் தம்பி அல்ல. சோகத்தில் இருக்கும் போது ஆறுதல் படுத்திக் கண்ணீரைத் துடைக்கும் எல்லாருமே அண்ணன் தம்பிகள்தான் என்ற அருமையான கருத்தையும் அந்தப் பாடலில் சொல்லி இருந்தார் கவியரசர்.