அதிகாரிகளையே திக்குமுக்காட வைத்த கண்ணதாசனின் வரிகள்!.. ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பாடல்!

Pasamalar Movie: காலந்தோறும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் படம் என்றால் அது பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பாசமலர் திரைப்படம் . அண்ணன் தங்கை பாசத்திற்கு எக்காலத்திற்கும் உதாரணமாக அமையும் திரைப்படமாக பாசமலர் திரைப்படத்தைத்தான் சொல்லலாம்.

அந்தளவுக்கு நிஜத்தில் அண்ணன் தங்கையாகவே மாறி நடித்திருப்பார்கள் சாவித்ரியும் சிவாஜியும். அந்தப் படத்தை பார்த்து அழாதவர்களே இல்லை என்றும் சொல்லலாம். பாசத்தை அன்பை உருக உருக காட்டி அனைவரையும் பிரமிப்பில் ஆழத்திய படம்.

இதையும் படிங்க: இவர் மட்டும் இல்லைனா? பிரபுதேவாவை மைக்கேல் ஜாக்சனாக மாற்றியவர் – சத்தியமா அவர் அப்பா இல்லைங்கோ

காலத்தை வென்ற காவியத்தலைவன் கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்களும் இன்றளவும் நம் செவி சாய்க்கும் வண்ணமாகத்தான் இருக்கின்றன. அவர் இல்லாவிட்டாலும் அவர் வரிகள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

இந்தப் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தாலும் 'வாராய் என் தோழி வாராயோ' என்ற பாடலை யாராலும் மறக்க முடியுமா? இன்று திருமணம் காணும் எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் பாடலாகவே அது மாறி போயிருக்கிறது.

இதையும் படிங்க: ஸ்ரீதர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரிமேக் செய்யும் எண்ணத்தை விட்ட மனோபாலா

எந்த திருமண மண்டபமாக இருந்தாலும் சரி திருமண வீடாக இருந்தாலும் சரி மணமகள் வரும் போது போடும் முதல் பாடலாகவே இது அமைந்து விட்டது. அதில் ஒரு கண்ணியமான வார்த்தை விளையாட்டை நடத்தியிருப்பார் கவிஞர்.

கணவன் - மனைவிக்கு இடையே இருக்கும் அந்தரங்கத்தை மிகவும் கண்ணியமாக தன் வரிகள் மூலம் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. குறிப்பாக ‘இரவோடு இன்பம் உருகாதோ. இரண்டோடு மூன்றும் வளராதோ’ என நாகரீகமான வரிகளை எழுதியிருப்பார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு பிறகு கார்த்திக்குத்தான் அந்த அங்கீகாரம் கிடைச்சது! ‘பருத்திவீரன்’ குறித்து பேரரசு சொன்ன சீக்ரெட்

காலத்தால் அழிக்க முடியாத வரிகளை கொடுத்து கூடவே மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசைக் கோர்வையும் இந்த பாடலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இந்த நிலையில் இந்தப் பாடல் சென்சாருக்கு சென்ற போது ‘இந்தப் பாடலில் உள்ள சில வரிகளை வெட்ட வேணடும் என தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொன்ன அழகை பார்க்கும் போது கொஞ்ச வேண்டும் என தோன்றுகிறது’ என தணிக்கை அதிகாரிகள் கூறினார்களாம்.

 

Related Articles

Next Story