நான் தலைகீழாகத்தான் குதிப்பேனு வாயடித்த கண்ணதாசன்... விதி யாரை விட்டது?
கவிஞர் கண்ணதாசன் தனது நிறுவனத்தில் சந்திரபாபுவினை வைத்து தயாரித்த படத்தினால் அவரின் வாழ்க்கையினை கடனில் முழ்கியதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.
கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் உருவாகிய படம் தான் சிவகங்கை சீமை. எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த இப்படம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டது. அப்போது சிவாஜி கணேசனுக்கு இருந்த வியாபார மார்க்கெட்டால் சிவகங்கை சீமை படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இதனால் மிகப்பெரிய கடனில் சிக்கினார் கண்ணதாசன். அதை சரி செய்யவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இவருக்கு உதவி செய்ய சிவாஜியே முன் வந்தார். இந்த செய்தி இயக்குனர் பீம்சிங் மூலம் கண்ணதாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இயக்க சிவாஜி நடிக்க ஒரு படம் கண்ணதாசன் நிறுவனத்துக்கு செய்து கொடுப்பதாக தீர்மானம் கொடுத்தனர். இப்படம் நடந்து இருந்தால், கண்டிப்பாக கண்ணதாசன் கடனில் இருந்து மீண்டு இருப்பார். ஆனால் விதி யாரை விட்டது.
சிவாஜியை வேண்டாம் எனக் கூறிவிட்டு சந்திரபாபுவினை தனது அடுத்த பட நாயகனாக ஒப்பந்தம் செய்தார். அப்படத்திற்கு கவலை இல்லா மனிதன் எனப் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அங்கு தொடங்கியது கவலை. சூட்டிங்கிற்கு சரியாக வரமாட்டார். அடிக்கடி காசு கேட்பார். குறித்த நேரத்தில் படத்தினை முடிக்க முடியாமால் திண்டாட்டம் துவங்கியது. எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்ற மன நிலைக்கு அப்போது வந்துவிட்டிருந்தார் கண்ணதாசன்.
ஒரு கட்டத்தில் கடைசி நாள் சூட்டிங்கிற்கு சீக்கிரமாக வர 20 ஆயிரத்தினை அதிகமாக கேட்டு பெற்றார். ஆனால் அப்போதும் கண்ணதாசனை தனது வீட்டு வாசலில் சில மணி நேரம் நிற்க வைத்து விட்டு சுவர் ஏறி சென்று விட்டாராம். இப்படி பல போராட்டங்களுக்கு இடையில் முடிந்த கவலை இல்லா மனிதன் படத்தினால் கண்ணதாசன் மொத்தமாக முழ்கினார் என்கிறார்கள் கோலிவுட் மக்கள்.