More
Categories: Cinema News latest news

கண்டாரா படத்தில் முதலில் ஒப்பந்தமான சூப்பர் ஸ்டார் நடிகர்… இது தெரியாம போச்சே!!

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான “கண்டாரா” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்துடன் இத்திரைப்படம் மோதியதால் தொடக்கத்தில் வரவேற்பு குறைந்திருந்தாலும், இரண்டு நாட்களிலேயே பிக்கப் ஆனது.

Kantara

கர்நாடக மாநிலத்தில் மூலை முடுக்கிலும் இத்திரைப்படத்தை கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தார்களாம். அந்த அளவுக்கு இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் இத்திரைப்படம் மிகவும் பிரபலமடைந்தது.

Advertising
Advertising

குறிப்பாக தமிழ்நாட்டில் “கண்டாரா” குறித்து அதிமாக பேசப்பட்டது. தமிழ் ரசிகர்களும் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு “கண்டாரா” திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் பல ஊர்களில் திரையிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிலும் இத்திரைப்படம் ஹிட் அடித்தது.

Kantara

“கண்டாரா” திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியிருந்தார். வனப்பகுதிக்குள் பழங்குடியினர் வசிக்கும் ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் வனத்துறை இறங்கும்போது, அவர்களுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பழங்குடிகளின் நாட்டார் தெய்வ வழிபாட்டை வைத்து ஒரு கதையம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “கண்டாரா” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “கண்டாரா” திரைப்படத்தின் கதையை ரிஷப் ஷெட்டி முதலில் புனித் ராஜ்குமாரிடம்தான் கூறினாராம். அவரும் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டாராம். ஆனால் புனித் ராஜ்குமார் அப்போது பல திரைப்படங்களில் பிசியாக இருந்ததால், அத்திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியையே நடிக்குமாறு கூறினாராம்.

இதையும் படிங்க: அஜித்தின் கேரியரையே திருப்பிப்போட்ட இயக்குனர்… மீண்டும் வந்த அரிய வாய்ப்பு… “AK 63”யா இருக்குமோ!!

Puneeth Rajkumar

இது குறித்து ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் பேசியபோது “புனித் ராஜ்குமார் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட கண்டாரா திரைப்படத்தை பற்றி என்னிடம் மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அந்த அளவுக்கு இந்த கதை அவரை ஈர்த்திருந்தது” என கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts