Categories: Cinema News Entertainment News latest news

மதன் கார்க்கி எழுதும் லவ் பாடல்களில் ஒளிந்திருக்கும் சூப்பர் சீக்ரெட்… உங்களுக்கு தெரியுமா?

லவ் பாடல்கள் என்றால் இங்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அதில், கொஞ்சம் ஸ்பீடாக வரும் காதல் பாடல்களை எழுதுவதில் மதன் கார்க்கி வல்லுவர். அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி. இந்த அடையாளத்துடன் சினிமாவிற்கு வந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தினை உருவாக்கி இருக்கிறார். இயக்குநர் ஷங்கருடைய மாபெரும் படைப்பாகிய எந்திரன் படத்தில் இருந்து அவரது திரை வாழ்க்கை துவங்கியது. ஆனால் அதில் வசனம் எழுதியதையே முதலில் செய்தார். பின்னர் அவரின் எழுதில் இரண்டு பாடல்களும் உருவாகின.

அதில் இருந்து சினிமாவில் தான் எழுதும் பாடல்களில் ஒரு பாணியை கையாண்டு வருகிறார் மதன் கார்க்கி. டூயட் பாடல்களில் அந்த திரைப்படத்தில் நாயகன் மற்றும் நாயகி செய்யும் தொழிலை வைத்தே வரிகளை எழுதினார். அப்படி அவர் எழுதிய எல்லா பாடல்களும் வைரல் ஹிட் ஆனது.

இதையும் படிங்க: டப்பிங்கிலும் கலக்கும் டாப் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்… அச்சோ இவர் வாய்ஸ் தான் இதா?

இதில், நண்பன் படத்தில் அஸ்க் லஸ்கா எனத் துவங்கு பாடலை எழுதி இருப்பார். அதில் விஜய் என்ஜினியரிங் மாணவராக இருப்பார். இதனால், விஜய் பாடும் வரிகளில், முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே என எழுதி இருப்பார். நாயகி இலியானா மருத்துவ மாணவியாக இருப்பார். அவருக்காக, நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன் உன் நெஞ்சில் நாடிமானி வைக்க காதல் காதல் என்றே கேட்க.. என எழுதி இருப்பார்.

அதுப்போல கோ படத்தில் அவர் எழுதிய பாடல் என்னமோ ஏதோ. இதில் ஜீவா புகைப்பட நிருபராக பணி புரிவார். அதற்காக அவருக்கான வரிகளில், ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. என எழுதி இருப்பார். துப்பாக்கி படத்தில் விஜயிற்காக அண்டார்டிகா வெண்பனியே பாடலை எழுதி இருப்பார். அதில் விஜய் ராணுவ வீரர் என்பதால் அது சம்பந்தப்பட்ட வரிகளே பாடலில் இடம் பெற்று இருக்கும். நீங்க கவனிச்சிருக்கீங்கலா!

Published by
Akhilan