கைதியை விட அட்டகாசமா இருக்கும் போலயே! ‘கார்த்தி 29’ படத்தின் கதை என்ன தெரியுமா?

Karthi 29: தான் ஒரு பெரிய நடிகர் என்ற ஒரு பிரெஸ்டீஜ் பார்க்காமல் சினிமாவை நம்பி களம் இறங்கும் புதுப்புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உயர்த்தி விடும் நடிகர்களில் எப்போதுமே கார்த்தி முதலிடத்தில் தான் இருப்பார். கார்த்தி நடித்த பெரும்பாலான படங்கள் புதுப்புது இயக்குனர்களுடன் தான் இருந்திருக்கும்.

படம் வெற்றி ஆகுமா ஆகாதா என்பதை எல்லாம் பற்றி யோசிக்காமல் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திலேயே நிறைய இயக்குனர்களை கார்த்தி அறிமுகம் செய்து இருக்கிறார். தற்போது கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படம் 96 டைரக்டர் பிரேம் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும்.

இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்

96 படம் எப்படிப்பட்ட ஒரு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதோ அதே மாதிரியான ஒரு உணர்வை மெய்யழகன் திரைப்படமும் ஏற்படுத்தும் என சமீபத்தில் நடந்த அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருமே பேசி இருந்தார்கள். 96 படம் என்பது காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். மெய்யழகன் திரைப்படம் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது என அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்கள்.

இதற்கிடையில் நேற்று கார்த்தியின் 29 ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான தமிழ் இயக்கப் போகிறார் .ட்ரீம் வாரியார் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது. டாணாக்காரன் படத்தை இயக்கியவர் தான் தமிழ் .இவர் பெரும்பாலான படங்களில் வில்லனாகவும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்.

இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…

இவர்தான் கார்த்தியின் 29 ஆவது படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் எப்படிப்பட்ட ஒரு கதை என்பதை ஒரு பேட்டியில் தமிழ் கூறியிருக்கிறார். இயக்குனர் தமிழுக்கு சொந்த ஊர் ராமேஸ்வரம். அதனால் ராமேஸ்வரத்தில் நடந்த சில சம்பவங்களை பின்னணியில் வைத்து ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த படத்தை எடுக்கப் போவதாகவும் 60களில் நடந்த ஸ்மக்லிங்கை அடிப்படையாக வைத்தும் இந்த படத்தை உருவாக்கப்போவதாகவும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

கேங்ஸ்டர் ஸ்மக்லிங் 60களில் நடந்த கதை என்பதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இது கார்த்திக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் கைதியை விட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: விஜய் கூட நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த ஷகிலா!.. தளபதி என்ன பண்ணார் தெரியுமா?!….

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it