Connect with us

Cinema News

வரிசையாக இரண்டாம் பாகங்கள்… கார்த்தி கைவசம் இத்தனை படங்களா?

Karthi: சமீப காலமாக தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வரும் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் கார்த்தியிடம் நிறைய இரண்டாம் பாகங்கள் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

இயக்குனராக விரும்பிய நடிகர் கார்த்தி, மணிரத்னத்திடம் சிலகாலம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பின்னர் அமிர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக கார்த்திக்கு வாய்ப்புகளும் குவிந்தது.

இதையும் படிங்க: ரெண்டு டீம்! எவ்ளோ பிஸியா இருந்தாலும் இத கண்டிப்பா செய்யனும்.. சூர்யா வீட்ல இப்படி ஒரு கண்டீசனா

ஆரம்பத்தில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த கார்த்தி, சமீப காலமாக தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதை எடுத்து கார்த்தி தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து அவரின் கைவசம் தற்போது ஏகப்பட்ட படங்கள் குவிந்திருக்கிறது.

அந்த வகையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தன்னுடைய 26வது படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தை தொடர்ந்து பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருடன் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தன்னுடைய 28 வது படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இதையும் படிங்க:  ஸ்ரீதேவியின் மகளுக்கு கொக்கி போட்ட சிலம்பரசன்… கூடவே இந்த சூப்பர்ஸ்டாருமாம்… ரைட்டே…

google news
Continue Reading

More in Cinema News

To Top