Home News Reviews Throwback Television Gallery Gossips

ஒரு வேளை LCUவாக இருக்குமோ? சூசகமாக சூர்யாவுடன் இணையும் படத்தை பற்றி அறிவித்த கார்த்தி

Published on: September 18, 2023
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பிகளாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில்  ஒரு படத்திலும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதே போல் கார்த்தியும் தற்போது நளன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து படங்களை ஹிட் செய்வதில் கார்த்தி மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை கிஸ் அடிச்சி வாழ்த்து சொல்லும் நயன்தாரா!.. உங்க ரொமான்ஸ் வேற லெவல்!.

இப்படி கார்த்தி சூர்யா இருவரும் தனித்தனியாக பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில் எப்போது ஒன்றாக நடிக்க போகிறீர்கள் என ரசிகர்களின் கேள்விகளாக இருந்து வந்தன. கூடிய சீக்கிரம் அது நடக்கும் என இருவரும் பதிலளித்து வந்தனர்.

இந்த நிலையில் லோகேஷின் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக அதாவது ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க அதே படத்தில் LCU வில் இணைந்தார் கார்த்தி.

இதையும் படிங்க: என்னய்யா!… எங்களுக்கு ஆப்பு வச்சிருவீங்க போலயே… அதிர்ந்து போன இறைவன் படக்குழு…

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய கார்த்தி ஒரே துறையில் பணியாற்றும் சகோதரர்களை பார்ப்பது என்பது  மிக அரிது. ஆனால் நாங்கள் அதை சிறப்பாக செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவும் இருக்கிறோம். முதலில்தான் பயந்தேன். ஆனால் இப்போது அந்தப் பயம் இல்லை என்று கார்த்தி கூறினார்.

கூடிய சீக்கிரம் இருவரும் இணையும் படத்தை பற்றிய அறிவிப்புகள் வரும் என கார்த்தி கூறியதிலிருந்து தெரிகிறது. ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் ஜப்பான் படமும் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: தண்ணியில புருஷனுடன் ஜாலியாக ஜல்சா பண்ணும் நயன்தாரா!.. செம ரொமான்ஸு போ!..