அந்த விஷயத்தில் அண்ணனை ஃபாலோ செய்யும் முரட்டு தம்பி.!
படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை தரமான கதைக்களமும் மக்களின் ரசனையும் தான் முக்கியம் என கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த முக்கால்வாசி திரைப்படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 23 படங்கள் தயாராகிவிட்டன.
அடுத்ததாக 24வது மற்றும் 25வது படங்களுக்காக தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம். அதிலும் குறிப்பாக தன்னுடைய 25வது திரைப்படம் ஒரு ஜெய் பீம் போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டோ, அல்லது சூரரை போற்று போன்ற ஒருவரின் பயோ பிக் படமாகவோ இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.
அவர் நடித்து வரும் சர்தார் மற்றும் விருமன் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியானது. அதில் கார்த்தி பழைய ரத்தினவேல் பாண்டியன், பருத்திவீரன் போன்ற முரட்டு தனமாக லுக்கில் மீண்டும் வந்துள்ளது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. அந்த படங்களின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் மணிரத்னத்தின் கனவு படமான பிரமாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வனில் கதையை தாங்கி செல்லும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நம்ம கார்த்தி. அந்த படம் இந்த கோடை விடுமுரையில் வெளியாக உள்ளது.