பாடகி சுசித்ராவுக்கு சரியாக செக் வைத்த கார்த்திக்குமார்… இனிமே எப்படி பேசுவீங்க…

by Akhilan |
பாடகி சுசித்ராவுக்கு சரியாக செக் வைத்த கார்த்திக்குமார்… இனிமே எப்படி பேசுவீங்க…
X

Suchitra: தன் முன்னாள் கணவர் கார்த்திகுமார் குறித்து மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்கள் குறித்து வரிசையாக பேட்டி கொடுத்து வந்த பாடகி சுசித்ராவிற்கு தற்போது ஒரு செட் பாய்ண்ட்டை வைத்திருக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இனி சுசித்ராவால் பேட்டி கொடுக்க முடியாது எனவும் பேசி வருகின்றனர்.

கோலிவுட்டையே கதிகலங்க வைத்த சம்பவம் சுசீலிக்ஸ். பாடகி சித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. ஆனால் இதை தான் செய்யவில்லை என சுசித்ரா மறுத்த நிலையில் அவருடைய கணவர் சுசித்ராவிற்கு மனநிலை பிரச்சனையை ஏற்பட்டு இருப்பதாக பேட்டி கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: கூலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் இதுதான்!.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…

பின்னர் இந்த தம்பதி முறையாக விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தனர். கார்த்திக் தன்னைவிட 16 வயது இளைய நடிகையான அமிர்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுசித்ராவும் தன்னுடைய முன்னாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று மிகப்பெரிய அளவில் வைரலானது.

முன்னாள் கணவரை கார்த்திக் குமாரை ஹோமோ செக்ஸ்சுவல் என்றும், அவர் நடிகர் தனுஷ் உடன் தனி அறையில் இருந்ததாகவும், நடிகை திரிஷா விஜய் வீட்டின் முன்னர் இன்று பிரச்சனை செய்ததாகவும், ஆண்ட்ரியா தன்னுடைய பணத் திமிரை சுசித்ராவிடம் காட்டியதாகவும் பலர் குறித்து தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசி வந்தார்.

இதையும் படிங்க: சினிமா கத்துக்க மனுசன் என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!.. போராடி வெற்றி பெற்ற அயோத்தி பட இயக்குனர்…

இதற்கு கார்த்திக் நான் ஹோமோ செக்ஸுவல் ஆக இருந்தால் அது பெருமையாக சொல்லிக் கொள்வேன். மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார் இருந்தும் மற்ற பிரபலங்கள் யாரும் பெரிதாக சுசித்ராவுக்கு எதிராக பேசாமலே இருந்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட ஈடு வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையில் இருதரப்பு வார்த்தையும் கேட்ட நீதிபதிகள் கார்த்திக் குமார் குறித்து பொதுவெளியில் பாடகி சுசித்ரா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் இனி சுசித்ராவால் பேட்டி கொடுக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

Next Story