கூலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் இதுதான்!.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…

X

Rajinikanth: ஒரே வெற்றியால் ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பான நடிகராக இயங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி படத்தில் இணைய இருக்கும் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அப்டேட் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. அதற்கடுத்து, அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கினார். அந்த நேரத்தில் நடந்த விஜய் மற்றும் ரஜினிக்கு இடையான மோதல் அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது.

இதையும் படிங்க: நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல… கண் கலங்கிய ராமராஜன்

இது மட்டுமில்லாமல் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அப்படம் மிகப்பெரிய அளவில் ரஜினியின் கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த வெற்றியால் மீண்டும் புத்துணர்வு அடைந்த ரஜினிகாந்த் தொடர்ச்சியாக தன்னுடைய படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அந்த வகையில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் நெகடிவ் கேரக்டரில் நடிப்பார் என்றும், பல வருடங்களுக்கு அவரின் நடிப்பில் வித்தியாசமான படமாக கூலி அமையும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட துவங்கி இருக்கிறது. இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அடுத்த படம் பற்றிய தகவல்களும் கசிந்திருக்கிறது.

இதையும் படிங்க: அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?

அந்த வகையில் ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கிறார். கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இப்படத்தில்தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஹுக்கும் என தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் இந்த டைட்டில் மாற்றம் இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்த வருட முதல் சில மாதங்களில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனிருத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.