முதல் படமே சூப்பர் ஹிட்… ஆனாலும் சோகத்தில் இருந்த கார்த்திக்!.. ஐயோ பாவம் மனுஷன்!..

Published on: September 30, 2023
karthik
---Advertisement---

Actor karthik: கருப்பு வெள்ளை காலத்தில் பல திரைப்படங்களில் நடித்து எம்.ஜி.ஆராலேயே சிறந்த நடிகர் என போற்றப்பட்டவர் முத்துராமன். இவரின் மகன்தான் கார்த்திக். நிழல்கள் படம் தோல்வி அடையவே அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என நினைத்த இயக்குனர் பாரதிராஜா அவரின் உதவியாளர் மணிவண்ணன் வைத்திருந்த ஒரு கதையை படமாக்குவது என முடிவெடுத்தார்.

எல்லாம் முடிவானாலும் கதாநாயகன், கதாநாயகி இருவரும் கிடைக்கவில்லை. கண்டிப்பாக புதுமுகமாக இருக்க வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். ஒருநாள் ஒரு தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனை பார்க்கிறார். அட இவன்தான் இந்த படத்தின் ஹீரோ என முடிவு செய்தார்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் கார்த்திக்கு உதவிய நடிகர்!.. நன்றி மறக்காமல் நவரச நாயகன் செய்த அந்த சம்பவம்!…

அந்த இளைஞனை பற்றி விசாரித்தபோது அவர் நடிகர் முத்துராமனின் மகன் என்பது தெரியவந்தது. எனவே, முத்துராமனை சந்தித்து அப்படத்தின் கதையை சொன்னார். முத்துராமனுக்கும் கதை பிடித்திருந்தது. எனவே, மகனை நடிக்க வைக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் அலைகள் ஓய்வதில்லை. பாரதிராஜா அப்படி அறிமுகம் செய்த இளைஞன்தான் நடிகர் கார்த்திக்.

கார்த்திக் பின்னாளில் நவரசநாயகனாக மாறியவர். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர். பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மௌனராகம் படத்தில் கார்த்தியை தவிர வேறு யாரையும் அந்த வேடத்தில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருப்பார்.

இதையும் படிங்க: அவரால் தான் எனக்கு இந்த கொடுமை… அவர் சந்தோஷமா தான் இருந்தார்.. தந்தையை வறுத்தெடுக்க கௌதம் கார்த்திக்!

பல இயக்குனர்களின் இயகக்த்திலும் நடித்துள்ளார். இவருக்கென பெண் ரசிகை கூட்டமும் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனாலும், உள்ளத்தை அள்ளித்தா போல காமெடி கலந்த காதல் கதைகளில் நடிக்க துவங்கி ஒரு ரவுண்டு வந்தார். இப்போது அவரின் மகன் கௌதம் கார்த்திக் நடிகராகிவிட்டார்.

கார்த்திக்கின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படம் முடிந்து வெளியாவதற்கு முன்பே அவரின் அப்பா முத்துராமன் இறந்துவிட்டார். தான் நடித்த முதல் படத்தை பார்க்க அப்பா இல்லையே என்கிற ஏக்கம் கார்த்திக்கு பல வருடங்கள் இருந்ததாம்.

இதையும் படிங்க: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த கார்த்திக்!.. அவருக்கு பதில் நடித்த பிரபல ஹீரோ!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.