கலைஞர் சொன்ன அறிவுரையை கேட்டு நடந்த ரஜினி!.. இப்பதான் காத்துல விட்டுட்டார்!..

by சிவா |
rajini
X

Rajinikanth: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எப்படிப்பட்ட நல்ல உறவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளராக, கதாசிரியராக, வசனகார்த்தவாக, அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மீது ரஜினிக்கு எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு. அதனால்தான் அவரை அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கலைஞர் கருணாநிதிக்கும் ரஜினியை மிகவும் பிடிக்கும். புதிய திரைப்படங்களை பார்க்கும்போது ரஜினியை வரவழைத்து அருகில் அமர வைத்துக்கொள்வார். கலைஞர் 100 விழாவில் பேசியபோது கூட ரஜினி இதுபற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். கருணாநிதியை அடிக்கடி சந்தித்து அரசியல் பேசுவது ரஜினியின் பழக்கமாக இருந்தது.

இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..

அதுவும் ஜெயலலிதாவோடு அவருக்கு மோதல் வந்தபோது கலைஞருக்கு ஆதரவாக செயல்பட்டு மறைமுக பிரச்சாரமும் செய்தார். திமுக வெற்றியடைவதற்கே ரஜினி முக்கிய காரணமாகவும் இருந்தார். விஜய், அஜித் போன்ற நடிகர்களே கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத நிலையில் கலைஞர் மீதிருந்த அன்பு மற்றும் மரியாதை காரணமாகவே ரஜினி அதில் கலந்துகொண்டார்.

karuannidhi

கலைஞர் கருணாநிதி ரஜினிகாந்துக்கு அவ்வப்போது சில அறிவுரைகளையும் கூறியிருக்கிறார். ஒருமுறை கலைஞருடன் படம் பார்க்க போன ரஜினி வெள்ளை தாடியுடன் போயிருக்கிறார். இதைப்பார்த்த கலைஞர் கலைப்புலி தாணுவிடம் 'ரஜினி போன்ற ஒரு நட்சத்திரம் இப்படி வெள்ளை தாடியுடன் வரக்கூடாது. அவரை கிளீன் சேவ் செய்து வெளியே வர சொல்லுங்கள்’ என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..

இதை, தாணு ரஜினியிடம் கூறினார். அடுத்தமுறை கருணாநிதியை சந்திக்க ரஜினி சென்றபோது கிளீன் சேவ் செய்து கொண்டு போனார். அதோடு, அவரிடம் ‘இப்ப என் முகம் எப்படி இருக்கு?.. என இந்த பக்கமும், அந்த பக்கமும் முகத்தை திருப்பி திருப்பி காட்டி’ குழந்தை போல் சிரித்திருக்கிறார்.

rajini

இதுபற்றி கலைப்புலி தாணுவிடம் பகிர்ந்த கருணாநிதி ‘என்னயா ரஜினி குழந்தை மாதிரி முகத்தை இந்த பக்கமும் அந்த பக்கமும் காட்டுகிறார். அவர் இப்படி இருப்பதில் எனக்கு சந்தோஷம்தான்’ என சொனனாராம். ஆனாலும், கடந்த சில வருடங்களாக ரஜினி வெள்ளை தாடியுடனே வலம் வருகிறார். அதுதான் அவருக்கும் பிடித்திருக்கிறது போல.

இதையும் படிங்க: விஜய் படத்தில் ரஜினியா? என்னங்க சண்டை செய்ற நேரத்துல இப்படி ஒரு ஷாக்கை கொடுக்குறீங்க?

Next Story