மனோஜ் அந்த விஷயத்துல அப்படிப்பட்டவரு... கருணாஸ் சொன்னது உண்மைதான்!

karunas manoj
தமிழ்த்திரை உலகின் இயக்குனர் இமயம் என்று புகழாரம் சூட்டப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மண்ணை விட்டு மறைந்து போனார். அவருடைய மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அவர் எப்படிப்பட்டவர் என்று பிரபல நடிகர் கருணாஸ் சில தகவரல்களைத் தந்துள்ளார். என்னன்னு பாருங்க.
இழந்தவனுக்குத் தான் அதோட வலி தெரியும் என்றார். எத்தனையோ பேர் பெரிய டைரக்டரின் மகன்... ஆனா இன்னும் முன்னுக்கு வரலன்னு கேலி செய்வாங்களாம். அதை எல்லாம் காதில் வாங்கிவிட்டு கனத்த மனதோடு கடந்து போவாராம் மனோஜ்.
அதனால்தான் இப்படி ஒரு வலி நிறைந்த வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இவரது நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது. கமல், பாரதிராஜா இயக்கத்தில் சிகப்பு ரோஜாக்கள் என்று ஒரு படம் நடித்தார். இது அப்போது சூப்பர்ஹிட் த்ரில்லர் மூவி. இந்தப் படம் பாரதிராஜாவின் வழக்கமான பாணியை விட்டு புதுமையாக எடுக்கப்பட்டு இருந்தது.

bharathiraja manoj
அதுவரை கிராமிய படங்களையே எடுத்த பாரதிராஜா வித்தியாசமாக எடுத்து இருந்தாலும் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் 2ம் பாகத்தை சிம்பு, சுருதிஹாசன் ஆகியோரை வைத்து எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடினாராம். ஆனால் அதற்குள் காலம் அவரை வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது.
எந்த இடத்தில் பார்த்தாலும் அண்ணான்னு பாசமாக பேசக்கூடிய ஒரு தம்பி. சமீபத்தில் விருமன் படத்தில் அவருடன் சேர்ந்து வேலை செய்யக்கூடிய ஒரு பாக்கியம் கிடைத்தது. மனோஜ் ஒரு நல்ல பையன். பெரிய இயக்குனரோட பையன் என்கிற தலைக்கனமோ, செல்வ செழிப்போடு வளர்ந்த பையன் என்கிற ஆட்டிட்யூட்டோ இல்லாமல் எல்லாரையும் ஒரே மாதிரி பாசமா நேசித்து பழகக்கூடிய ரொம்ப எதார்த்தமான ஒரு பையன் என்கிறார் நடிகர் கருணாஸ்.