---Advertisement---

Karuppu: கருப்பு ரிலீஸ் எப்போது?… ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!..

Published on: February 15, 2026
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்க ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்திருக்கிறார். படத்தில் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்த போது படம் நிறுத்தப்பட்டது. எனவே, லக்கி பாஸ்கர் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போனார் சூர்யா. ஒருகட்டத்தில் அந்த படம் முடிந்து சூர்யா மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கப்போனார். அதன்பின் ஒருவழியாக அந்த 20 நாட்கள் ஷூட்டிங்கை முடித்து கருப்பு படத்தை முடித்தார்கள்..

ஆனாலும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவே இல்லை. ஏனெனில் படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை. இந்த படத்தை தயாரித்த சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு 65 கோடி வரை விலை சொன்னதால் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் நிலைமையை புரிந்து கொண்ட அவர் தற்போது படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகிய இரண்டையும் சேர்த்து 45 கோடிக்கு Zee5 நிறுவனத்திற்கு விற்றிருக்கிறார்..

ஆனாலும், இப்போது வரை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படம் பற்றி பேசிய ஆர்ஜே பாலாஜி ‘படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.. ஆனால் படத்திற்கு முன்பு ஹைப் ஏற்றி படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையென்றால் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக முடியும். அதனால்தான் இந்த படம் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறோம்..

கருப்பு நன்றாக இருக்கும்.. அது என்னால் உறுதியாக சொல்ல முடியும்.. வலிமை படத்துக்கு அப்டேட் கேட்டது போல இந்த படத்திற்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்கிறார்கள்.. கண்டிப்பாக கருப்பு திரைப்படம் இந்த வருட கோடை விடுமுறையில் தேர்தலுக்கு பின் ரிலீஸாகும். கண்டிப்பாக கருப்பு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.