கரூரில் இளையராஜா நிழ்ச்சியில் டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர்கள்… யார் காரணம்னு பாருங்க!

by sankaran v |   ( Updated:2025-05-04 04:43:33  )
ilaiayaraja
X

ilaiayaraja

Ilaiyaraja: இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது. சென்னை, கும்பகோணம், திருநெல்வேலியில் நடந்தது. எல்லா இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் சமீபத்தில் கரூரில் நடந்தது.

இந்த நிகழ்வில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்துருக்கு. டிக்கெட் எடுத்தும் சில பேருக்கு உள்ளே போக முடியலை. உள்ளே போனாலும் இருக்கைகள் கிடைக்கல. 20 ரூபா தண்ணீர் பாட்டிலை 40 ரூபாக்கு விற்குறாங்க. இதெல்லாம் நியாயமா? அப்படின்னு ஒரு சிலர் கோபப்பட்டு ஒர்ஸ்ட் ஒர்ஸ்ட்டுன்னு சொல்லிட்டுப் போனாங்க. இது ஏன் நடந்தது? இதெல்லாம் இசைஞானியின் கவனத்துக்கு வரலையான்னு கேள்வி எழுகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

கரூரில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்வை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதற்கு 5000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.500 வரையில் டிக்கெட் போட்டுருக்காங்க. எல்லா மக்களுக்கும் பயன்படுற மாதிரி இந்த டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளார்கள்.

3000ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு போலீஸ் உள்ளே விடலன்னா எப்படி இருக்கும்? ஒரு சராசரி குடும்பஸ்தன் 5 டிக்கெட் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வர்றாங்க. இளையராஜாவோட நிகழ்ச்சிங்கறதால தான் வர்றாங்க. உள்ளே 3 மணி நேரம் நின்னுக்கிட்டு இருக்க முடியுமா? இருக்கை இல்லங்கறாங்க. அதனால பலரும் கோபத்துல டிக்கெட்டைக் கிழிச்சிப் போட்டுட்டுப் போயிட்டாங்களாம்.

இதுக்கு என்ன காரணம்னு விசாரிச்சா ஒரு சில அரசியல்வாதிகளின் தலையீடுகள்னு சொல்றாங்க. 5 பேரு போறதுக்குப் பத்து பேரு போயிட்டாங்களாம். மற்றபடி இசை நிகழ்ச்சி ரொம்ப சூப்பராக நடந்ததாம். இளையராஜாவைப் பொருத்த வரை நிகழ்ச்சியின் இடையில் மக்களோட மொழியில் பேசிக் கவரும் ஆற்றல் மிக்கவர். அதனால் அந்த நிகழ்வு கலகலப்பாக்கி விடுவார்.

#image_title

எளிய மக்களுக்குப் புரியும் வகையில் ஒவ்வொரு பாடலையும் எப்படி இசை அமைத்தேன் என்றும் சொல்லி விடுகிறார். இதே போன்ற நிகழ்வுகள் சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கும் நடந்தது. அப்போ ஏ.ஆர்.ரகுமான் டிக்கெட் கிடைத்தும் பார்க்க முடியாம போனவங்களுக்கு நான் பொறுப்பை ஏற்று பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுறேன்னாரு. ஏ.ஆர்.ரகுமான் அப்படி சொல்லத் தேவையில்லை. ஏன்னா அதையும் ஒரு நிறுவனம்தான் நடத்தியது.

ஆனா இதுல இளையராஜாவுக்கு நேரடியா பொறுப்பு இல்லை. ஒரு தனியார் நிறுவனம் நடத்தியதால் அவங்க தான் பொறுப்பு. ஆனா இளையராஜாவுக்கு மறைமுகமாகப் பொறுப்பு இருக்கு. ஏன்னா இளையராஜாவைப் பத்தித்தான் மக்களுக்குத் தெரியும். அந்த நிறுவனத்தைப் பத்தித் தெரியாது. அதனால இளையராஜாவின் கூட இருப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இனி இதுபோன்ற நிகழ்வுகள் வராமப் பார்த்துக்கறதுதான் அந்த நிறுவனங்கள் இளையராஜாவுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story