அடுத்த பாக்யலட்சுமி , கண்ணம்மாவை ஒரு வழியா தேடிட்டாங்கப்பா! இவர்தான் ‘கதாநாயகி’ நிகழ்ச்சியின் வின்னரா?

Published on: September 26, 2023
radhika
---Advertisement---

Title Winner of Kadhanayagi : விஜய் டிவி ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு வகையில் புதுபுது நிகழ்ச்சிகளை கொடுத்துக் கொண்டே வருகின்றன. நடனம், நகைச்சுவை, பாடல், கேம் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளித்து வருகின்றோம்.அந்த வகையில் முதன் முறையாக நடிப்பிற்கு என்று ஒரு புது நிகழ்ச்சியை ஆரம்பித்தது.

அதுதான் ‘அடுத்த கதாநாயகி’ என்ற  நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல திரைப்பட இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரும் நடிகை ராதாவும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் குரோஷி தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பூஜ்ஜியமாகும் கோபி… அப்பா ரூட்டில் ஜொல்லு பார்ட்டியான செழியன்…

இந்த  நிகழ்ச்சியின் நோக்கம் இதில் வெற்றி பெறும் போட்டியாளர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலின் கதாநாயகியாக மாறுவார். பெண்களை மையப்படுத்தி படங்கள் வந்து கொண்டிருக்கும் போது சீரியலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீரியல்கள் வந்து  கொண்டுதான் இருக்கின்றன.

உதாரணமாக பாரதிகண்ணம்மா, பாக்யலட்சுமி போன்ற சீரியல்களை குறிப்பிடலாம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம்  வெற்றிபெறும் போட்டியாளருக்கு நல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் கதாநாயகி நிகழ்ச்சியில் கடந்த வாரம் செமி ஃபைனல் நடைபெற்றது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: தொல்லை செய்த விஜயா… மீண்டும் வட்டிக்கு வாங்கி கடனை அடைத்த ரோகினி…

அதில் நேரடியாக ஃபைனலுக்கு சில போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.இந்த நிலையில் கதாநாயகி நிகழ்ச்சியின் வின்னர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசினாதான் டைட்டில் வின்னர் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி வந்தனர். பிரபலங்கள் பலரும் இவர்களின் நடிப்புத் திறமையை பாராட்டியிருக்கின்றனர். இவர்கள்தான் டைட்டில் வின்னர் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது எந்தளவு உண்மை என்பதை இந்த வார இறுதியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: மீண்டும் தள்ளிப்போகும் விடாமுயற்சி!. விஜய்தான் காரணமா?!… இதுக்கு ஒரு எண்டே இல்லையா?!…

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.