Connect with us

Cinema News

மச்சக்கார விஜய்சேதுபதி!.. கத்ரீனாவுடன் லிப் லாக்!.. கிறிஸ்துமஸ்னு சொல்லிட்டு பொங்கலுக்கு வருதே!

அந்தாதூன் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், காயத்ரி, ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

நம்ம ஊர் நயன்தாரா பாலிவுட்டுக்கு செல்லும் போது மும்பை கத்ரீனா கைஃப் கோலிவுட் பக்கம் வரக் கூடாதா என்பது போல பைலிங்குவல் படமாகவே இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் பையன்கிட்ட இருந்து கீபோர்டை முதல்ல புடுங்குங்க.. அயலான் பாட்டு ஹாஃப் பாயிலா இருக்கே!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த விஜய்சேதுபதி மும்பைகார், ஜவான், மெரி கிறிஸ்துமஸ், ஃபர்ஸி என பாலிவுட்டில் பக்காவாக செட்டில் ஆகி விட்டார்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பல காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு கூட வெளியாக முடியாமல் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: வெளியேறிய அரண்மனை 4… பொங்கலுக்கு வெளியாகும் 3 படங்கள்!.. இதுதான் ஃபைனல் லிஸ்ட்!..

தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் என பலத்த போட்டி இருக்கும் நிலையில், விஜய்சேதுபதியும் மெரி கிறிஸ்துமஸ் படத்துடன் பொங்கல் ரேஸில் பங்கேற்கிறார்.

தமிழில் வெளியான டிரெய்லரில் காயத்ரி, ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமாரை எல்லாம் காட்டியுள்ளனர். ஆனால், இந்தி டிரெய்லரில் அவர்கள் யாரையும் காட்டாமல் வேறமாதிரி கட்ஸ் போட்டுள்ளனர். குறிப்பாக கத்ரீனா கைஃப் விஜய்சேதுபதியை இழுத்து வச்சு லிப் கிஸ் அடிக்கும் சீன் தமிழ் டிரெய்லரில் இல்லை. இந்தி டிரெய்லரை அதற்காகவே ரசிகர்கள் தேடி ஓடி பார்க்கலாம்.  படத்தின் கதை கொஞ்சம் 96 படத்தை காப்பி அடித்து உல்டா செய்தது போலவே இருக்கிறது. அந்தாதூன் இயக்குநரின் மேஜிக் இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top