ஏ.ஆர். ரஹ்மான் பையன்கிட்ட இருந்து கீபோர்டை முதல்ல புடுங்குங்க.. அயலான் பாட்டு ஹாஃப் பாயிலா இருக்கே!

இந்த பாட்டை எல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் தான் போட்டாருன்னு 2கே கிட்ஸை வேணா ஏமாத்தலாம் 90ஸ் கிட்ஸை ஏமாத்த முடியாது என ரஹ்மான் ரசிகர்களே கொந்தளித்துள்ளனர். அந்தளவுக்கு அயலான் படத்தின் லேட்டஸ்ட் பாடல் ஹாஃப் பாயிலாக உள்ளதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

சிம்புவுக்கு மட்டும் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது, மறக்குமா நெஞ்சம் என சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து விட்டு சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஐ படத்தில் மிச்சம் இருந்த அயலா அயலா வரிகளை வைத்து ஒரு பாட்டு போட்டு இருக்கீங்களே என ரஹ்மான் ரசிகர்கள் ரவுண்டு கட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: 6 நாள் நடிச்சதுக்கு இத்தனை கோடி சம்பளமா?!.. வேற லெவலில் இறங்கி அடிக்கும் உலக நாயகன்..

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஒரு வழியாக பொங்கலுக்கு வருவது உறுதி என தொடர்ந்து நம்புங்க பாஸ் எங்களை எங்கிற ரேஞ்சுக்கு அறிவித்து வருகின்றனர்.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அந்த படத்தில் வந்த பாடல்கள் கூட இன்னமும் கேட்கும்படியும் முணுமுணுக்கும்படியும் இருக்கும். ஆனால், அயலான் படத்தின் முதல் பாடலான வேறலெவல் சகோ பாடலை விடவும் படு மோசமாக இந்த அயலா அயலா பாடல் இருக்கிறதே ஏன் என்கிற கேள்வியை சிவகார்த்திகேயன் ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரிய நடிகர்.. மூனு மடங்கு சம்பளம்!.. ஆந்திராவிலும் கொடியை நட்ட யோகிபாபு..

வரும் பொங்கலுக்கு ரஹ்மான் இசையில் லால் சலாம் மற்றும் அயலான் என இரு படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அயலான் பாடல்களை பார்த்தால் ஏ.ஆர். ரஹ்மான் போட்டது போலவே தெரியவில்லை. அவரது மகன் ஒருவேளை போட்டிருப்பாரோ என கலாய்த்து வருகின்றனர்.

மொத்த ஆல்பத்தையும் ஹிட் பாடல்களாக நிரப்பி இத்தனை காலமாக ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் லிங்கா படத்துக்கு கூட ஓரளவுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருந்த நிலையில், அயலான் படத்திற்கு அவரே வில்லனாக மாறிவிட்டாரே என்றே ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story