பெரிய நடிகர்.. மூனு மடங்கு சம்பளம்!.. ஆந்திராவிலும் கொடியை நட்ட யோகிபாபு..

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்றவர்தான் யோகிபாபு. அதன்பின் பல முயற்சிகளும் எடுத்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்படியே ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கினார். வடிவேலுவுக்கு பெரிதாக மார்க்கெட் இல்லை.

நடிகர் விவேக்கும் மறைந்துவிட்டார். சூரியோ ஹீரோவாக நடிக்க போய்விட்டார். எனவே, காமெடிக்கு காலியான இடத்தை சரியாக பிடித்துகொண்டார் யோகிபாபு. அவரின் காமெடிகள் பெரிதாக சிரிக்க வைப்பதில்லை என்றாலும் இப்போதைக்கு அவரை விட்டால் வேறு காமெடி நடிகர் இல்லை என்பதால் அவரையே தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆள பாத்து எட போடாதீங்க ஏஜிஎஸ்! வளர்த்து விட்டவரிடமே வேலையை காட்டிய பிரதீப் ரெங்கநாதன்

ரஜினி, அஜித், விஜய் என எல்லோரின் படங்களிலும் யோகிபாபு நடிக்க துவங்கிவிட்டார். இப்போது வெளியாகும் பெரும்பலான படங்களில் யோகிபாபு நடித்து வருகிறார். அதேசமயம் அவ்வப்போது மண்டேலா போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்து ஆச்சர்யம் கொடுத்து வருகிறார்.

இப்போதைக்கு யோகிபாபுவின் கொடிதான் கோடம்பாக்கத்தில் பறந்து கொண்டிருக்கிறது. பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கிவிட்டார். அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து பல படங்களிலும் அப்படியே நடித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை தமிழ படங்களில் மட்டுமே நடித்துவந்த யோகிபாபு இப்போது தெலுங்கு சினிமா பக்கமும் செல்லவிருக்கிறார்.

இதையும் படிங்க: அட என்னங்க இப்படி..! பாய்ஸ் மணிகண்டன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

தெலுங்கில் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கும் பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க யோகிபாபு நடிக்கவுள்ளார். இதற்காக தமிழில் அவர் வாங்கும் சம்பளம் போல் 3 மடங்களு கொடுக்க சம்மதித்துள்ளனர். எனவே, சந்தோஷமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளாராம் யோகிபாபு.

ஏற்கனவே பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானுடன் நடித்துவிட்ட யோகிபாபு இப்போது டோலிவுட்டுக்கும் போகவிருக்கிறார். பிரபாஸின் படங்கள் இப்போது பல மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படமாகவே உருவாவதால் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி

 

Related Articles

Next Story