Connect with us
kamal

Cinema News

6 நாள் நடிச்சதுக்கு இத்தனை கோடி சம்பளமா?!.. வேற லெவலில் இறங்கி அடிக்கும் உலக நாயகன்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கமலின் திரைவாழ்வில் அவர் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் இதுவரை வசூல் செய்யாத அளவுக்கு வசூலை வாரிக்குவித்து தயாரிப்பாளர் கமலுக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிட்டது.

இதையடுத்து, இந்த ஒரே படத்தால் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் வாங்கி வந்த சம்பளத்தை விட அதிக சம்பளத்தை வாங்கும் நடிகராக கமல்ஹாசன் மாறிவிட்டார். விக்ரம் பட ஹிட்டால் கமலின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்து கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படமும் டேக் ஆப் ஆனது.

இதையும் படிங்க: பெரிய நடிகர்.. மூனு மடங்கு சம்பளம்!.. ஆந்திராவிலும் கொடியை நட்ட யோகிபாபு..

அந்த படத்திற்கு எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்க இப்போது இந்தியன் 3 படமும் உருவாகிவிட்டது ஆனால், இந்தியன் 2-வுக்கான படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அதேபோல், மணிரத்தினத்துடன் ‘தக் லைப்’ என்கிற படத்தையும் கமல்ஹசன் துவங்கினார்.

ஒருபக்கம், ஹெச்.வினோத்துடன் கை கோர்த்து ஒரு படத்திற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் 3 படங்களிலும் கமல் நடிக்கவுள்ளார். அதோடு, தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்துவரும் கல்கி என்கிற ஒரு புதிய படத்திலும் கமல் நடித்து வருகிறார். இந்த படம் பல மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படமாக வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ஆள பாத்து எட போடாதீங்க ஏஜிஎஸ்! வளர்த்து விட்டவரிடமே வேலையை காட்டிய பிரதீப் ரெங்கநாதன்

கமல் இந்த படத்திற்கு கொடுத்த மொத்த கால்ஷீட்டே 20 நாட்கள்தான். அதற்கு அவர் பேசிய சம்பளம் ரூ.150 கோடி. இந்த கல்கி திரைப்படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளது. இந்த இரண்டு பாகத்திற்கும் சேர்த்துதான் கமலுக்கு ரூ.150 கோடி பேசப்பட்டுள்ளது. இதுவரை கமல் 6 நாட்கள் மட்டுமே இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் கல்கி முதல் பாகத்தில் வரவுள்ளது.

kalki

அடுத்து 2ம் பாகத்திற்காக 16 நாட்கள் நடிக்கவுள்ளாராம். மொத்தத்தில் முதல் பாகத்தில் 6 நாட்கள் மட்டுமே நடித்திருக்கிறார். பேசப்பட்ட ரூ.150 கோடியை பிரித்தால் 6 நாட்கள் நடித்து முதல் பாகத்திற்காக ரூ.75 கோடியை பெற்றுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம். எந்த இந்திய சினிமா நடிகரும் இவ்வளவு குறைவான நாட்களுக்கு இத்தனை கோடி சம்பளத்தை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி

google news
Continue Reading

More in Cinema News

To Top