Categories: latest news

ஒரு படம் ஓடுனதுக்கு இந்த சீன் தேவையா? கவினால் கடுப்பான முன்னணி இயக்குனர்!..

Kavin: சின்னத்திரையில் பிஸியாக இருந்த கவின் ஒரு படத்தின் வெற்றியால் தலைக்கால் புரியாமல் ஆடுகிறார். இதனால் அவருக்கு கிடைக்க இருந்த இரண்டு பட வாய்ப்புகளே மிஸ்ஸாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். அதன்பின்னர், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கினார். அதை தொடர்ந்து வந்து கோலிவுட்டில் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

இதனால் கவினை இயக்குனர்கள் கொண்டாடத் தொடங்கினார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. தற்போது ஸ்டார் மற்றும் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு வெற்றிமாறன் உதவி இயக்குனர் இயக்க இருந்த படத்திலும், சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை கவின் தற்போது தவறவிட்டு இருக்கிறார்.

இதற்கு சம்பளம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றியால் கவினுக்கு அதிக பட வாய்ப்புகளும் வருவதும் அவர் தன்னுடைய சம்பளத்தினை ராக்கெட் வேகத்தில் ஏற்றி இருக்கிறார். 7 கோடி சம்பளம் கேட்ட நிலையில் அவரை வெற்றிமாறன் உதவி இயக்குனர் படத்தில் இருந்து நீக்கினர். இந்த சம்பளம் டாடாவில் அவர் வாங்கியதை விட மிகப்பெரிய அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

இதே போல, சுந்தர்.சி தன்னுடைய கலகலப்பு3ல் கவினை நடிக்க வைக்கவே விரும்பினாராம். இதற்குரிய பேச்சுவார்த்தைகளும் நடந்த நிலையில் அதே சம்பளத்தினை இங்கும் கவின் கேட்க சுந்தர்.சி தரப்பு குறைக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய மார்கெட் உச்சத்தில் இருப்பதால் கவின் விடாப்பிடியாக இருந்தாராம்.

இதனால் கலகலப்பு3 படத்தினையே தற்போது நிறுத்தி வைத்துவிட்டார் சுந்தர்.சி என்ற தகவல்கள் கசிந்து இருக்கிறது. விரைவில் யார் இந்த படத்தில் இணைவார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago