Kavin: பிளடி பெக்கர் தோல்வியால் திடீர் முடிவெடுத்த கவின்… இதுக்கு சும்மா இருக்கலாம்…

by Akhilan |
Kavin
X

Kavin

Kavin: நடிகர் கவின் தன்னுடைய பிளடி பெக்கர் தோல்வியால் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கவின் ஆரம்பகாலம்: நடிகர் கவின் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் புகழ் பெற்றவர். வேட்டையன் கேரக்டரில் நடித்து ஹிட்டடித்து வந்த கவினுக்கு பிக்பாஸில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் முதலில் பாசிட்டிவாக இருந்தவர். தொடர்ந்து நெகட்டிவ் இமேஜ்களால் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: Vijay Serial: ராதிகாவிடம் சிக்கிய கோபி… விஜயாவுக்கு கிடைத்த பெத்த தொகை… பாண்டியன் திடீர் மாற்றம்..

தனக்கென ஒரு டீமை உருவாக்கி விட்டு எலிமினேஷனை கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இருந்தும் அவர் டீமில் இல்லாத ஷெரின் பைனலிஸ்ட்டாக உள்ளே வந்தார். கப்பை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

கவினின் சினிமா வாழ்க்கை: இதை தொடர்ந்து கவினுக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் குவிந்தது. லிஃப்ட் படத்தில் நடித்து சரியான தொடக்கத்தை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான டாடா மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து கவின் பரபரப்பான நடிகராக மாறினார். கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் தற்போது கவின் நடிப்பில் கிஸ், ஹாய், மாஸ்க் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: Archana-Arun: ஹாய் ஹர்லி… அருண் பிறந்தநாள் வாழ்த்தில் உடைந்த ரகசியம்.. அர்ச்சனா எண்ட்ரி இருக்குமோ?

ஆனால் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. கதை புரியவில்லை என பல நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகிறது. இதனால் நடிகர் கவின் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த வகையில், சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கவினின் ஐந்தாவது திரைப்படமான Kavin05 சூட்டிங் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தை முடித்துக் கொண்ட பின்னர் அடுத்தடுத்த படங்களில் கவின் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story