கண்ணுக்குள்ளே நிக்கிறாரே கவின்!.. ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!..
இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர் நடிப்பில் ஸ்டார் எனும் படம் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க வேண்டியதாக இருந்தது. கமல்ஹாசன் போன்றும், ரஜினிகாந்த் போன்றும் ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான கெட்டப்புகளில் கொடுத்த போஸ்கள் போஸ்டர்களாக வெளியாகின.
ஆனால், தோனியின் எல்ஜிஎம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், ஸ்டார் படத்தில் இருந்து விலகி விட்டாதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஜெயிலர் மருமகளா இது?.. வயித்துப் புள்ளத்தாச்சியா டான்ஸிங் ரோஸ் கூட என்ன பண்றாரு பாருங்க!..
இந்நிலையில், அவருக்கு பதிலாக கவின் இந்த படத்தில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். சினிமா கலைஞனை பற்றிய வித்தியாசமான படமாக இந்த ஸ்டார் படம் இருக்கும் என தெரிகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் நாளை மாலை ஸ்டார் படத்தில் ஸ்டார் இன் தி மேக்கிங் பாடல் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஐயோ ஹார்ட் பீட்டு எக்கு தப்பா எகிறுது!.. சைனிங் உடம்பை காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்..
ஸ்டாராக கவின் தோன்றும் காட்சிகள் எல்லாமே கலக்கலாக அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது என ஏகப்பட்ட கவின் ஆர்மியினர் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் ரச்சிதாவுடன் வேட்டையனாகவும் சரவணனாகவும் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் தனக்கான இடத்தை பெரும் முயற்சியால் பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி பட வசனத்தை பேசி அப்பாவிடம் வாய்ப்பு கேட்ட விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா!…
ஹாரர் படமான லிப்ட் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான டாடா படமும் கவினுக்கு நல்லதொரு ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில், அடுத்து வெளியாக உள்ள ஸ்டார் படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.