Connect with us

Cinema History

ரஜினிக்காக புது முயற்சி எடுத்த பாலசந்தர்… எஸ்.பி.முத்துராமன் கையில் கொடுக்க என்ன காரணம் தெரியுமா?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் அவரின் படங்கள் என்றாலும் கூட அவரின் குருநாதர் கே.பாலசந்தர் செய்த சில விஷயங்களால் தான் என்பதும் உண்மை. ரஜினிகாந்துக்காக அவர் நிறைய ரிஸ்கை எடுத்து இருக்கிறார் என்பதும் சுவாரஸ்ய தகவலாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் ஆரம்பகாலங்களில் அதிகமாக கே.பாலசந்தரின் படங்களில் நடித்து வந்தார். அப்படங்கள் எல்லாமே கிளாசிக் படங்களாக தான் உருவானது. ஆனால் ஒரு சமயம் ரஜினியை வைத்து கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும் என கே.பாலசந்தர் விரும்புகிறார். அதற்காக அவர் முதலில் எடுத்த முடிவு எஸ்.பி.முத்துராமன் தான்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தை விட எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தான் அதிகப்படங்களில் நடித்தும் இருக்கிறார். கிட்டத்தட்ட 25 படங்களினை முத்துராமன் இயக்க ரஜினிகாந்த் நடித்துள்ளார். பெருவாரியான திரைப்படங்களில் வெற்றியாக தான் முடிந்தது.

அந்த ட்ரிக்கை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் கே.பாலசந்தர். நெற்றிக்கண் படத்தினை கதையை ரெடி செய்து விட்டார். முத்துராமனை அழைத்த போது அவருக்கு பெரிய இயக்குனரின் கதையை நாம் இயக்குவதா என திகைப்பு வந்துவிட்டதாம். ஆனால் கே.பாலசந்தர் விடவில்லை.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

கதை, திரைக்கதை எழுதுவது தான் என் வேலை. இனிமேல் உங்கள் விருப்பத்துக்கு படத்தினை இயக்கிக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டாராம். சிக்கனமாக எடுக்க வேண்டாம். ஏவிஎம்மில் இயக்கும் போது எத்தனை பிரம்மாண்டமாக இயக்குனீர்களோ? அதையே இங்கும் செய்யுங்கள் என்றாராம்.

இப்படத்துக்கு கதை கே.பாலசந்தர் என்றாலும் வசனம் எழுதியது விசு என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கண்ணதாசன் பாடல்கள் எழுத இளையராஜா இசையமைத்து இருந்தார். ரஜினிகாந்த் அப்பா, மகன் என இருவேடங்களில் நடிக்க நெற்றிக்கண் 1981ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதையும் படிங்க: டெலிட்டான காதலன் படத்தின் மியூசிக்…. யோசிக்காமல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம்…

google news
Continue Reading

More in Cinema History

To Top