ஆத்தாடி இது உலக மகா கிளாமரு!.. டாப் கியர் போட்டு தூக்கும் கீர்த்தி சுரேஷ்...
அம்மா நடிகை என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. நான் பின்னாளில் நடிகையாகத்தான் இருப்பேன் என சிறுவயதிலேயே அம்மாவிடம் சொன்னவர் இவர்.
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படம் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.
அடுத்து வந்த ரெமோ திரைப்படமும் அவருக்கு கை கொடுத்தது. விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷுடன் தொடரி என ஒரு ரவுண்டு வந்தார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகையாக மாறிவிட்டார். பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்ரியின் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு வயித்தெறிச்சலா?.. குக் வித் கோமாளி மணிமேகலை வெளியேற காரணமாக இருந்த சம்பவம்!..
பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக கவர்ச்சி நடிகைகள் போல கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.