அடுத்தடுத்து இரண்டு படங்களில் விஜய் பட நடிகையை புக் செய்த ஜெயம் ரவி... யார் தெரியுமா?

by ராம் சுதன் |
jeyam ravi
X

ஜெயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி தற்போது மிகவும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பூமி படம் தோல்வியை தழுவினாலும் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

அந்த வகையில் ஜெயம் ரவி தற்போது அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மண, கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன், மீண்டும் அஹ்மத் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் என அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

keerthi suresh

இந்த படங்கள் தவிர இயக்குனர் ராஜேஷுடனும் புதிய படத்தில் ஜெயம் ரவி கூட்டணி அமைக்க உள்ளாராம். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு புதிய படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் அதன்படி அறிமுக இயக்குனர் ஆண்டனி என்பவர் இயக்க உள்ள புதிய படத்தில் தான் இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.

kerthi suresh1

கீர்த்தி சுரேஷிற்கும் தற்போது தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையெனில் அடுத்தடுத்து இரண்டு புதிய தமிழ் படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Next Story