அம்மா நடிகை என்பதால் சிறுவயது முதலே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கும் வந்தது. சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாகவும் நடித்தார். அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மயக்கம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. ‘வி’ சேஃபில் முழுசா காட்டும் பூஜா ஹெக்டே!..
ஒருகட்டத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை வைத்து தெலுங்கில் உருவான மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்தார். சாணி காயிதம் படத்தில் பக்கா ஆக்ஷன் காட்சிகளில் பழிவாங்கும் பெண்ணாக அசத்தியிருந்தார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு பட சினிமா விழாவில் கவர்ச்சி உடையுடன் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்!.. ஐயோ மொத்த அழகும் தெரியுதே!..
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…