Connect with us

Cinema News

இர்பான் கூட துபாயில் அந்த பிரபல நடிகை!.. ரெண்டு பேரும் கொடுத்த போஸை பார்த்தீங்களா பாஸ்!..

பிரபல யூடியூப் கலைஞரான இர்பான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தனக்கும் தனது மனைவி ஆலியாவுக்கும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை துபாய்க்கு சென்று அறிந்து வந்து அதை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதனைப் படம் பிடித்து வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கினார்.

ஆனால், அவரை சந்தோஷத்தில் பெரிய இடி விழுந்தது போல தமிழ்நாட்டில் குழந்தை பாலினம் குறித்து அறிந்து கொள்வதோ அல்லது அதை வெளிப்படையாக தெரிவிப்பது சட்டப்படி குற்றமாக உள்ள நிலையில் அதை மீறி யூடியூப் இர்பான் நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு என அவருக்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க: சந்தானத்துக்கு இருக்குற விசுவாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை!.. அமரனை அசிங்கப்படுத்திய பிரபலம்!..

அதற்கு மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை சுமுகமாக இர்பான் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி முடித்து விட்டார் என அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், இர்பான் ஜாலியாக துபாயில் நடிகையை கீர்த்தி சுரேஷ் உடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து மஜா செய்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் இர்பான் இணைந்து துபாயில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இர்பானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: விஜய் மட்டும்தானா?!. நானும் வரேன்!.. ரீ ரிலீஸாகும் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படம்!..

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றுள்ள இர்பான் அடிக்கடி துபாய்க்கு சென்று வருவது வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவாங்கி மற்றும் மாயா உள்ளிட்ட பலர் இர்பானுடன் இணைந்து வொர்த்தா சீரிஸ் வீடியோக்களில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. யூடியூப் சேனலில் பல லட்சம் சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் இர்பான் என்றும் அவருக்கு பெரிய இடங்களில் செல்வாக்கு அதிகம் உள்ளதால் எந்த பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து ஈசியாக தப்பித்து விடுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

google news
Continue Reading

More in Cinema News

To Top