Categories: Entertainment News

ஆத்தா! அந்த பல்லை மட்டும் காட்டாதம்மா.. கீர்த்தி சுரேஷை மரண ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!..

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இந்த ஆண்டு பல நடிகைகள் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள் எல்லாம் இந்தி படத்துக்காக ஒல்லியாக மாறி ஓடாய் தேய்ந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் மோசமாக மாறி உள்ளார் என பாடி சேம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அச்சச்சோ பயங்கரமா இருக்கே!.. அடுத்த வருஷம் வரப்போற படங்களுக்கு இப்பவே சாபம் விட்ட ப்ளூ சட்டை மாறன்!

தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் சமந்தா நடித்த ஃபிளாஷ்பேக் போர்ஷனில் அக்கா கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கிறார் எனக் கூறுகின்றனர்.

மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை வெகு விமர்சையாக ஒவ்வொரு வருஷமும் கொண்டாடி வருகிறார். நயன்தாரா, பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் வாய்விட்டு சிரித்ததை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இனிமே அதிகமா செட்ல பார்க்க முடியாது போல!.. இப்படித்தான் வீட்ல ஹேப்பியா இருக்க போறாரு போல நயன்தாரா!

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் புதிய படங்கள், விளம்பரங்கள் என நயன்தாரா, சமந்தா போல தானும் மாற வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Published by
Saranya M