அட்லி தயாரிப்பில் ஹிந்தியில் அறிமுகமாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்திலும் தங்கையாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: லியோவில் முக்கியமானதே இதுதான்!.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. அண்ணாச்சியாக மாறிய லோகி!..
கடந்த ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் போல்டாக நடித்த நிலையில் பல விருதுகளை வென்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் நடிகர் விஜயின் அட்மின் ஆன ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா என்னும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடம்பாக்கத்துல வீடே வாங்கிடுவார் போல!.. ரஜினி, தனுஷை தொடர்ந்து கமல் படமா?.. சிக்ஸர் அடிக்கும் ஷிவாண்ணா!..
அப்படியே அட்லி தயாரிப்பில் பாலிவுட் க்கும் செல்லப் போகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகை நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அட்லி, தனது திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை உருவாக்க உள்ள நிலையில் அந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க புஷ்ப் எடுக்கும் உடற்பயிற்சியை காலையில் செய்துள்ள நிலையில், அதன் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: வேறொரு நல்ல ஆர்ட்டிஸ்ட போட வேண்டியதுதானே? சரத்குமாரால் கடுப்பான அந்த டாப் நடிகை
வரும் அக்டோபர் 17ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள கீர்த்தி சுரேஷுக்கு அவரது ரசிகர்கள் இப்பவே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
சிவகார்த்திகேயன் சுதா…
VijayTV: விஜய்…
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…