தமிழ் திரையுலகில் ‘அசுரன்’, ‘வாத்தி’ போன்ற படங்களில் மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கென் கருணாஸ். இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். யூத் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தளபதி விஜய் நடித்த ஹிட் படமான ‘யூத்’ தலைப்பை இவரது படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
இத்திரைப்படம் 15 வயதுடைய பிரவீன் என்ற ஒரு பள்ளி மாணவனின் வாழ்க்கையைச் சுற்றி நகர்வதாக அமைந்துள்ளது. பருவ வயதில் நுழையும் அந்த மாணவன், பள்ளிப் படிப்பு முடிவதற்குள் தனது உண்மையான காதலை தேடி அலையும் சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான பயணமே இக்கதை எனக் கூறப்படுகிறது. பதின்வயது இளைஞர்கள் சந்திக்கும் மனப்போராட்டங்கள், நட்பு மற்றும் காதலை இப்படம் எதார்த்தமாகப் சொல்வதாக கூறப்படுகிறது. 96, ஆட்டோகிராப் மற்றும் சமீபத்தில் வந்த வித் லவ் போன்ற படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பிடிக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க: விரைவில் வெளியாகும் மெண்டல் மனதில் பர்ஸ்ட் சிங்கிள்
கென் கருணாஸ் உடன் அனிஷ்மா அனில்குமார், தேவயானி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசை: ஜி.வி. பிரகாஷ் குமார். சமீபத்தில் வந்த முட்டகலக்கி பாடம் செம ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படம் வருகிற மார்ச் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் பாலிவுட்டின் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமான ‘துரந்தர் படமும், யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் படமும் இதே நாளில் வருவதால், ‘யூத்’ படத்திற்கு திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…