தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹீரோவாக தனக்கென தனி முத்திரையை பதித்து வருபவர் நடிகர் ரவிமோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவிமோகன் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆரம்பத்தில் அவருடை சினிமா கெரியர் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தாலும் இடையில் தொடர் சரிவுகளை எதிர்நோக்கினார். இதனால் அவருடைய மார்கெட் சரிவை கண்டது. இதில் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு , குடும்ப பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளானார்.
இதில் கென்யா பாடகி கெனிஷாவுடன் அவருடைய நெருக்கம் பற்றி சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் கெனிஷா தனது தோழி என்று கூறிக் கொண்டு வந்த ரவிமோகன் போகபோக பொது வெளியில் இருவரும் கை கோர்த்த படியே வருவது, ஒரே நிறத்தாலான ஆடைகளை அணிவது என தம்பதிகளுக்கே டஃப் கொடுத்து வந்தனர்.
இவர்களுக்குள் இருப்பது நட்பா அல்லது காதலா என்று புரியாமல் நெட்டிசன்கள் குழம்பி போயிருக்கின்றனர். இந்த நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அவர் காரில் செல்லும் போது பின்னனியில் ரவிமோகன் நடித்த என்றென்றும் காதல் படத்தின் பாடல் ஒலிக்க, ‘ நான் எங்கு போனாலும் எங்கு இருந்தாலும் என்னுடைய மைண்டில் நீங்கதான்’ என ஆங்கிலத்தில் ஒரு கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார். ரவிமோகன் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதால் அவரை குறித்துதான் அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
