லியோவை பாராட்டி டிவிட்!.. இது கேஜிஎஃப் பட இயக்குனர்தானா?!. அங்கதான் இருக்கு டிவிஸ்ட்…

Published on: October 19, 2023
leo
---Advertisement---

Prasanth Neel about Leo: ஒரு வழியா லியோ படம் ரிலீஸாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் சந்தேகங்களும் இன்று தெளிவாகியிருக்கும். விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம்தான் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.

விஜயுடன் சேர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ராக் ஸ்டார் அனிருத் இசையில் படம் மிகப்பெரிய அளவில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: படத்த ரத்னகுமார்தான் டைரக்ட் பண்ணியிருக்காரு!.. கிளைமேக்ஸ் பாத்துட்டு கதறுறும் ரசிகர்கள்!.. ஐயோ பாவம்!..

படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். படத்தில் முதல் பாதி ஃபையர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாம் பாதியில் லோகேஷ் கொஞ்சம் சறுக்கியதாகவும் சில பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து உலகத்தரத்தில் இந்திய சினிமாவை எங்கேயோ கொண்டு சென்ற பெருமைக்குரியவர் பிரசாந்த் நீல்.

இதையும் படிங்க: இனிமே என் படமாதான் இருக்கும்!. சொன்னது நீதானா?… லியோவில் விஜய்க்காக சறுக்கிய லோகேஷ்!..

முதன் முதலில் இந்திய சினிமாவில் 1000 கோடி வசூல் செய்த திரைப்படமாகவும் கே.ஜி.எஃப் அமைந்தது. இந்த நிலையில் பிரசாந்த் நீல் இன்று ரிலீஸான லியோ திரைப்படத்தை பார்த்து சமூக வலைதளத்தில் அவருடைய பதிவினை பதிவிட்டிப்பதாக செய்திகள் வெளியானது.

அதில் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டதாகவும் முற்றிலும் பொழுதுபோக்கான திரைப்படமாகவும் விஜயை வேறொரு தளத்திற்கு லோகேஷ் கொண்டு சென்றுவிட்டதாகவும் மியூஸிக்கில் பட்டையை கிளப்பியிருக்கிறார் அனிருத் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அண்ணாமலையை கைது செய்த போலீசார்..! நைசாக எஸ்கேப்பான ஸ்ருதி-ரவி ஜோடி..!

அதுமட்டுமில்லாமல் படத்தில் சில சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் கடைசி 30 நிமிடத்தில் படம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தும் என்றும் கூறி இது ஒரு படமாக இல்லாமல் முற்றிலும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது என்று கூறி கண்டிப்பாக தியேட்டரில் சென்று பாருங்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை டேக் செய்து விஜய் ரசிகர்கள் கே.ஜி.எஃப் பட இயக்குனரே லியோ படத்தை இந்தளவுக்கு பாராட்டியிருக்கிறார் என்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் பிரசாந்த் நீல் தன்னுடைய ட்விட்டர் கணக்கை கடந்த ஜனவரி மாதத்திலேயே மூடிவிட்டாராம். இது தெரியாமல் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.