KGF: களவாணி படத்தில் நடித்திருக்கும் கேஜிஎஃப் யாஷ்… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே…

by Akhilan |   ( Updated:2024-11-12 01:52:46  )
KGF
X

Kalavani

KGF: கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழை பெற்று இருக்கும் யாஷ் களவாணி திரைப்படத்தில் நடித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப்: பெரிய அளவில் உலக ரசிகர்களிடம் புகழ்பெறாத ஒரு துறையாக இருந்தது கன்னட சினிமா. ஆனால் ஒரே படம் அதனுடைய மொத்த வரலாற்றையும் மாற்றியது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த திரைப்படம் கேஜிஎப்.

இதையும் படிங்க: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை

சாதாரண மனிதன் எப்படி தானாக மாறி ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை தன் கைப்பக்கம் மாற்றினான் என்பதை பிரம்மாண்டமாக சொல்லியதில் கேஜிஎப் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் புகழை பெற்றது. முதல் பாகம் சூப்பர்ஹிட் அடித்தது. இதனால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகம்: யாஷ் நடிப்பில் கேஜிஎப் இரண்டாம் பாகம் விஜயின் பீஸ்ட் படத்துடன் வெளியானது. போட்டியில் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்வி இருந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை அசால்ட்டாக அடித்து துவைத்து மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.

இதனால் பேன் இந்தியா நடிகராக யாஷ் ரசிகர்களிடம் புகழ் பெற்றார். தொடர்ச்சியாக கன்னட சினிமாவும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. இத்திரைப்படம் தான் யாஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உயரத்தை அவருக்கு கொடுத்தது.

இதையும் படிங்க: Vijay Serial: ராதிகாவிடம் சிக்கிய கோபி… விஜயாவுக்கு கிடைத்த பெத்த தொகை… பாண்டியன் திடீர் மாற்றம்..

களவாணி: இந்நிலையில் சூப்பர் ஹிட் திரைப்படமான களவாணி திரைப்படத்தில் யாஷ் நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சற்குணம் இயக்கத்தில் விமல் மற்றும் ஓவியா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் களவாணி. திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.

KGF

kirataka

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து களவாணி திரைப்படம் கன்னட மொழியில் கிரட்டக்கா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்திலும் ஓவியா தன்னுடைய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் விமலுக்கு பதில் யாஷ்தான் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story