Connect with us
kamal

Cinema News

ஜெயிலர் லியோ-லாம் ஓரமா போ!.. மணிரத்னம் படத்தில் கமல் லுக்க பாருங்க!.. வெளியான போஸ்டர்!…

KH234: தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் எப்படி முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறாரோ அப்படி முக்கிய இயக்குனராக பார்க்கப்படுவர் மணிரத்னம். வசனங்களின் மூலம் கதை சொல்லப்பட்ட சினிமாவில் காட்சி வழி அழகை ரசிகர்களுக்கு கடத்திய சிறந்த தொழில்நுட்ப வல்லுனர் இவர்.

இவர் இயக்கிய மௌன ராகம் படத்தை பார்த்து பலருக்கும் ஒளிப்பதிவாளர் ஆகும் ஆசையும், இயக்குனர் ஆகும் ஆசையும் வந்தது. நாயகன், அக்னி நட்சத்திரம், பம்பாய், ரோஜா, தளபதி, இருவர் என இவர் இயக்கிய பல திரைப்படங்கள் சினிமாவை பற்றி கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு பாடங்கள்.

இதையும் படிங்க: ஒரே நாளில் பேரைக் கெடுத்துக்கிட்ட கமல்! லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம் – மூஞ்சியை எங்க வைப்பாருனு தெரியலயே

எல்லோரும் ஒரு ரூட்டில் போன போது அவர்களிடமிருந்து விலகி வேறுமாதிரியான, யாரும் தொட யோசிக்கும் கதைகளை தைரியமாக தொட்டு களமாடியவர் இவர். அதனால்தான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இப்போதும் இருக்கிறார். கமலை வைத்து இவர் இயக்கிய நாயகன் படம் தமிழ் சினிமாவைன் சிறந்த படங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது.

அந்த படம் வெளியாகி 34 வருடங்கள் கழித்து இப்போதும் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர், எனவே, எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவும் உள்ளது. ஒருபக்கம் ஹெச்.வினோத் பட வேலைகள் நடந்தாலும், மறுபக்கம் மணிரத்தினத்தின் பட வேலைகளும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: ஆர்வக்கோளாரில் கமல் செய்த வேலை!. ரத்தம் வழிந்து பிளாஸ்டிக் சார்ஜரி வரை போன சம்பவம்…

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் தலைப்பு தொடர்பான வீடியோ வெளியாகவுள்ளது. எனவே, இந்த அறிவிப்போது இந்த படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், கமலின் தோற்றத்தை பார்க்கும் போது கமலும் மணிரத்தினமும் இணைந்து ஏதோ பெரிய சம்பவம் செய்யபோகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இது கமல் நடிகும் 234வது திரைப்படமாகும். இந்த புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kamal

google news
Continue Reading

More in Cinema News

To Top