தளபதி 68 படத்துல அந்த பாகுபலி நடிகர் நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் போட்டோ.. உண்மை என்ன?..

Published on: December 18, 2023
---Advertisement---

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தில் பாகுபலி படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல கன்னட நடிகர் நடிக்கப் போவதாக அவரது பெயரில் உன்னை ட்விட்டர் கணக்கில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியானது.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் அடுத்து பொங்கலுக்கு வரவுள்ள தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வரலாறு காணாத பேரிடர்.. எப்படியாவது காப்பாத்துங்க.. மனசு தாங்காமல் பதறிய மாரி செல்வராஜ்!..

தமிழ் மற்றும் தெலுங்கை போல கன்னட சினிமாவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்திலும் கன்னட நடிகர் ஒருவர் நடிக்க உள்ளாரா என ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ள நிலையில். அது முற்றிலும் போலியான செய்தி என்றும் நடிகர் கிச்சா சுதீப் பெயரில் உள்ள ஃபேக் அக்கவுண்டில் இருந்து பரப்பப்பட்ட ஃபேக் நியூஸ் தான் அது என்பது தெரிய வந்துள்ளது.

தளபதி 68 படத்தில் ஏற்கனவே விஜயுடன் இணைந்து டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷை வச்சு செய்த பிரபல நடிகர்!.. யாருன்னு பாருங்க!

இந்நிலையில் புதிதாக கிச்சா சுதீப்பும் அந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரே பதிவிட்டு இருப்பது போன்ற ட்வீட் ஒன்று வெங்கட் பிரபு மற்றும் விஜயுடன் இருக்கும் புகைப்படத்துடன் வைரல் ஆகி வந்த நிலையில், அது முற்றிலும் போலி கணக்கில் இருந்து பரப்பப்பட்ட செய்தி என்றும் கிச்சா சுதீப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த ஒரு பதிவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.