Connect with us

Cinema News

வரலாறு காணாத பேரிடர்.. எப்படியாவது காப்பாத்துங்க.. மனசு தாங்காமல் பதறிய மாரி செல்வராஜ்!..

சமீபத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் மிகப்பெரிய பேய் மழை பெய்து ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. பலர் தங்களது உடைமைகளை இழந்து விட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சில நாட்களாக தான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நீர் பல இடங்களில் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில் தீடிரென தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பலரது வாழ்வாதாரத்தை அடியோடு நாசம் செய்து விட்டது.

இதையும் படிங்க:  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷை வச்சு செய்த பிரபல நடிகர்!.. யாருன்னு பாருங்க!

150 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு பேய் மழை பெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 30 செ.மீ., மழை காரணமாக பல ஊர்களின் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த கோரத்தை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரலாறு காணாத இந்த பேரிடரில் தென் தமிழகம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட பல கிராமங்களின் நிலை ரொம்பவே மோசம் அடைந்துள்ளது.  படகுகளால் கூட உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அதிகளவில் உள்ளது.

இதையும் படிங்க: தளபதி 68ல் களமிறங்கும் கவர்ச்சி புயல்!.. அட அப்ப ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான் போல!..

ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி 20க்கும் அதிகமான கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இந்த கிராமங்கள் எல்லாமே நீர் நிலைகள் நிறைந்த விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எப்படியாவது அங்கிருக்கும் ஆயிரக் கணக்கான மக்களை மீட்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

google news
Continue Reading

More in Cinema News

To Top