அந்த முடிவ எடுத்து முச்சந்தியில நின்னதுதான் மிச்சம்! பண்ண தப்ப நினைச்சு வருத்தப்படும் கிரண்

by Rohini |   ( Updated:2023-09-05 10:33:16  )
kiran
X

kiran

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எல்லா நடிகைகளையும் ஓவர் டேக் செய்யக்கூடிய நடிகையாக கிரண் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள்.அந்த அளவுக்கு நல்ல நிறத்துடன் அழகான தோற்றத்துடன் ஜெமினி படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் கிரண்.

முதல் படத்திலேயே ரசிகர்கள் அனைவரையும் தன்னுடைய வசீகரத்தால் கவர்ந்தார். ஜெமினி படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர் போன்ற படங்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மேலும் ரசிகர்களின் அபிமானங்களை பெற்றார்.

இதையும் படிங்க : நல்லவேளை விஜய்சேதுபதி நடிக்கல!.. இல்லைன்னா இந்நேரம் சர்ச்சை வெடிச்சிருக்கும்.. 800 ட்ரெய்லர் ரிலீஸ்!..

தொடர்ந்து கோலிவுட்டின் கனவு நாயகியாக கிரண் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவுக்கே முழுக்கு போட்டு விட்டு சென்றார். அதன் பிறகு வாய்ப்புகளும் இல்லாமல் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமலை படத்தில் விஜயுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

அதன் பிறகு விஷால் நடித்த ஆம்பள படத்தில் விஷாலுக்கு ஆண்டியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடித்த சகுனி படத்திலும் ஒரு துணை நடிகையாகத்தான் நடித்திருந்தார். அதன் பிறகு கிரணை படங்களில் பார்க்கவே முடியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களை அல்லு தெறிக்க விட்டார் கிரண்.

இதையும் படிங்க : சினிமா அவ்ளோ பெரிய சீன் இல்லை!.. அதை விட முக்கியமானது நிறைய இருக்கு.. பொசுக்குன்னு சொன்ன எச். வினோத்!..

தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வந்த கிரண் தற்போது தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கிரண் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகின்றது. அதாவது கிரண் ஒருவரை காதலித்தாராம்.

ஆனால் தான் காதலித்தது ஒரு வடிகட்டிய முட்டாள் என்றும் அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என்றும் அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் பொதுவாக காதலில் விழுந்து எல்லாவற்றையும் இழந்து வீக் ஆகிவிடுகின்றனர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயிலரில் தமன்னா செஞ்ச வேலை!. கடுப்பில் சன் பிக்சர்ஸ்!. அதனாலதான் ஒன்னுமே கொடுக்கலயாம்!…

மேலும் காதல் செய்வது தவறு ஒன்றுமில்லை. நான் ஒரு முட்டாள் மற்றும் அந்த நேரத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதனால் தான் என் வாழ்க்கையில் பலவற்றை இழக்க நேரிட்டது என்று கூறினார்.

Next Story