ஜெயிலரில் தமன்னா செஞ்ச வேலை!. கடுப்பில் சன் பிக்சர்ஸ்!. அதனாலதான் ஒன்னுமே கொடுக்கலயாம்!...

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். தமிழில் கமலை தவிர எல்லோருடனும் நடித்துவிட்டார். தற்போது ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

சமீபகாலமாக தமன்னா அதிகம் பிரபலமாகி வருகிறார். அதற்கு காரணம் இரண்டு ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும், கிளுகிளுப்பு காட்சிகளிலும் அவர் காட்டிய தாராளம்தான். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சூடாக்கியது. இவர் ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்….

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துவிட்டது. வசூல் குவிந்த மகிழ்ச்சியில் இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ரஜினிக்கு பல கோடிக்கான செக்கை கொடுத்ததோடு, ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தார்.

அதேபோல், நெல்சனுக்கு ரூ.40 கோடிக்கு மேல் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்ததோடு, அவருக்கு ஒரு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்தார். அடுத்து அனிருத்துக்கும் அதேபோல் செக் மற்றும் கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கலாநிதி மாறன் கத்துன கத்துக்கு 10 மடங்கு லாபம் வந்துடுச்சாம்!.. ஜெயிலர் ரியல் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!..

ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் இப்படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடித்தந்தது. இந்த பாடல் வெளியானவுடனேயே இப்படத்திற்கு நல்ல ஹைப் உருவானது. தமன்னா ஆடிய குத்தாட்டத்தை பார்த்து அவரை போலவே பலரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டனர். ஆனால், தமன்னாவுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஜெயிலர் படம் படப்பிடிப்பில் இருந்தபோது தமன்னா சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். ஹிந்தி வெப் சீரியஸில் நடித்து வந்ததால் ஜெயிலர் படப்பிடிப்பில் சரியாக அவர் கலந்துகொள்ளவில்லை. இது கலாநிதி மாறனுக்கும், சில நாள் இது ரஜினிக்கும் கோபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் தமன்னாவுக்கு எந்த பரிசும் கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..

 

Related Articles

Next Story