கலாநிதி மாறன் கத்துன கத்துக்கு 10 மடங்கு லாபம் வந்துடுச்சாம்!.. ஜெயிலர் ரியல் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!..
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாகவே போட்ட பணத்தை விட 24 கோடி ரூபாய் லாபத்தை பார்த்த சந்தோஷத்தில் தான் கலாநிதி மாறன் ஆடியோ லாஞ்சில் அந்த கத்து கத்தி ரெக்கார்டு மேக்கர் என்றெல்லாம் ரஜினிகாந்தை உச்சிக் குளிர வைத்துள்ளார் என்கின்றனர்.
ஜெயிலர் திரைப்படம் 18 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் செய்த வசூல் சாதனை மற்றும் லைஃப் டைம் வசூல் எப்படி இருக்கும் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படம் 15 நாட்களில் 525 கோடி ரூபாயை வசூல் செய்து இமாலய வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவின் புதிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது என கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி புடிச்ச உடும்பு புடி!.. என் பேலன்ஸே போயிடுச்சு!.. நெல்சனின் மறக்க முடியாத தருணம்!..
சன் பிக்சர்ஸ்க்கு மிகப்பெரிய லாபம்:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 220 கோடி ரூபாயாம்.
அதில், நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டும் 80 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. அவரது சம்பளம் மற்றும் மற்ற நடிகர்களின் சம்பளங்களை கழித்து விட்டால் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் ஜெயிலர் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!
ஜெயிலர் லைஃப் டைம் வசூல்:
இந்த 220 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் முதலீடு செய்த நிலையில், படம் ரிலீஸ் ஆகும் முன்னரே படத்தின் டிஸ்ட்ரிபியூஷன், டிஜிட்டல் உரிமம், ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் விநியோகம் உள்ளிட்டவற்றிலேயே 245 கோடி வசூல் ஈட்டி விட்டதாம். அப்பவே 25 கோடிக்கும் அதிகமாக லாபம் பெற்ற நிலையில், படம் ரிலீசுக்கு பின்னர், அந்த லாபம் 10 மடங்கு அதிகரித்து இருப்பது தான் தற்போது சன் பிக்சர்ஸை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது என்கின்றனர்.
ஜெயிலர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக லைஃப் டைம் வசூலாக தமிழ்நாட்டில் 185 கோடி ரூபாயும் ஓவர்சீஸில் 175 கோடி ரூபாயும் மற்ற இடங்களில் 200 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 565 கோடி ரூபாயை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர். மனோபாலா உள்ளிட்டோர் இப்பவே ஜெயிலர் 600 கோடி வசூல் என்றெல்லாம் சொல்லும் நிலையில், இந்த வார இறுதியிலும் ஜெயிலர் மீண்டும் பிக்கப் ஆனால், அந்த வசூலை எட்டும் என்பது தெரிகிறது.
இதையும் படிங்க: ரஜினி வேண்டாம்னு சொல்லி சூப்பர் ஹிட் அடித்த ரெண்டு பாட்டு!.. பாட்ஷா பட சீக்ரெட்டை பகிர்ந்த சுரேஷ் கிருஷ்ணா…
25 கோடி லாபத்தில் இருந்து ஜெயிலர் படம் வெறித்தனமாக ஓடிய நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு 200 கோடிக்கும் அதிகமான லாபம் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். மீண்டும் ஒரு முறை ரஜினிகாந்தின் படத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்றும் பெரிய சம்பளத்தை கொடுக்க சன் பிக்சர்ஸ் ரெடியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.