Connect with us

Cinema News

ரஜினி புடிச்ச உடும்பு புடி!.. என் பேலன்ஸே போயிடுச்சு!.. நெல்சனின் மறக்க முடியாத தருணம்!..

ஜெயிலர் திரைப்படம் 550 கோடி வசூலை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் இயக்குநர் நெல்சன் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை ரொம்பவே லைக் செய்ய வைத்துள்ளது.

சோஷியல் மீடியாவில் ஒரு படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது, திட்டுவது எல்லாம் அவர்களோட என்டர்டெயின்மென்ட் நாம அதை மண்டைக்குள்ள போட்டுக் கொண்டால் நம்ம வேலையை பார்க்க முடியாது.

இதையும் படிங்க:  தளபதி 68-ல் அந்த நடிகை டவுட்தானாம்!.. என்னடா இப்படி டிவிஸ்ட் வைக்கிறீங்க!..

ஓரளவுக்குத் தான் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி எடுத்துக் கொள்வேன். அடுத்து என்ன செய்யணும்னு மட்டும் தான் நினைச்சுட்டு நகர்ந்து செல்வேன் எனற நெல்சன் ஜெயிலர் படத்தின் முதல் நாள் அன்று எடுத்த காட்சியை கடைசியாக படத்தில் வைக்க முடியவில்லை. எடிட்டிங்கில் தூக்கிட்டோம் என்றார்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளே நுழைந்ததும் என்னை அப்படியே கட்டிப் புடிச்சாரு, ஏதோ லேசா ஹக் பண்ணிட்டு விட்டுருவாருன்னு தான் நினைச்சேன். செம டைட்டா ஹக் பண்ணிட்டாரு, என் பேலன்ஸே போயிடுச்சு, அப்போ தான் தோணுச்சு, நாம எடுத்த படம் ரஜினி சார் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நிச்சயம் வெற்றி பெறும் என நினைச்சிட்டாரு என்கிற கான்ஃபிடன்ட்டே அப்போ தான் வந்துச்சு என்றார்.

இதையும் படிங்க: வாழ்நாளில் வாங்காத சம்பளம்! ரஜினியால் பகத்பாசில் காட்டில் கொட்டிய பண மழை..

நெல்சன் பிளே லிஸ்ட்டில் என்ன என்ன பாட்டு இருக்கு என்கிற கேள்விக்கு, எனக்கு இளையராஜா பாட்டும் பிடிக்கும், ரஹ்மான் சார் பாட்டும் பிடிக்கும் நான் பாட்டு எப்படி கேட்பேன் என்றால், வரிசையாக ஒவ்வொரு பாடலாக கேட்க மாட்டேன். ஒரே பாடலை லூப் மோடில் போட்டு ஒரு நாள் முழுவதும் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். என் பக்கத்துல யாருன்னா வந்துட்டா ஆஹா.. ஆரம்பிச்சிட்டான் என்றே ஓடிடுவாங்க என்றார்.

தால் படத்தின் அந்த பாடலை அப்படித்தான் கேட்டுக் கொண்டு இருப்பேன். வர்மன் கேங் பற்றி ஸ்க்ரிப்ட் எழுதும் போது, இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும்னு நினைச்சு வச்சேன். அது சரியா ஒர்க்கவுட் ஆகியிருக்கு, பலரும் இப்போ அந்த பாட்டுக்கு வைப் பண்ணிட்டு இருக்கிறது ரொம்பவே ஹேப்பியா இருக்கு என பேசியுள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top