நான் இப்படி ஆனதுக்கு காரணமே அந்த படம்தான்!.. பல வருடங்கள் கழித்து புலம்பும் கிரண்...

by Rohini |   ( Updated:2024-02-24 05:26:19  )
kiran
X

kiran

Actress Kiran: இணையத்தை கடந்த சில வருடங்களாக தன் கவர்ச்சிப் புகைப்படத்தால் திண்டாட வைத்தவர் நடிகை கிரண் ரத்தோர். ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் தன் காந்த பார்வையால் தன் பக்கம் இழுத்தவர்.

மணிஷா என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய கிரணை இன்று வரை ஜெமினி கிரண் என்றே அவரை அடையாளம் கண்டு வருகின்றனர் ரசிகர்கள். அந்தளவுக்கு அந்தப் படம் கிரணுக்கு ஒரு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் பிறகு தமிழில் ஒரு டாப் நடிகையாக கிரண் வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

இதையும் படிங்க: நைட்டு போன் பண்ணி வரியாண்ணு அந்த ஹீரோ கேட்டான்!.. பகீர் கிளப்பிய கிரண்!.. ஷகீலாவுடன் ஓப்பன் பேட்டி!

இந்த நிலையில் கிரண் முதன் முதலாக ஒரு தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. ஷகீலாவுடனான அந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தனக்கு என்ன ஆனது? ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கெல்லாம் ஷாக்கிங்கான பதிலை கூறியிருக்கிறார் கிரண்.

கிரண் ஒரு ஆப் மூலமாக தன்னை தொடர்பு கொள்கிறவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்வதாக பல செய்திகளில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த ஆப் பணத்திற்காகத்தான் என்றும் அதில் சில பாலிவுட் நடிகர்களுடன் பேச நினைத்தால் அதற்கு என்று சில கூடுதல் தொகை வசூல் செய்வதாகவும் கூறினார் கிரண். அதோடு ரசிகர்களுக்காக க்ளாமர் புகைப்படங்களும் அதில் காட்டப்படுகின்றன என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அஜித்துக்கு முன்னோடி கவுண்டமணிதான்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…

மேலும் ஆன்லைனில் ப்ராஸ்ட்டியூட் செய்கிறீர்களா என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு ‘ நான் ஒரு டீசண்ட்டான குடும்பத்தில் இருந்து வந்தவள். அப்படியெல்லாம் கிடையாது’ என்று பதிலளித்திருக்கிறார். ஹீரோயினாக நடித்து வந்த கிரண் விஜயுடன் ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனத்தை ஆடியிருப்பார். அந்தப் பாடல் இன்றளவும் சூப்பர் டூப்பர் ஹிட். அதற்கு காரணமே பிரசாந்துடன் நடித்த வின்னர் திரைப்படம்தான் என்று கூறினார் கிரண்.

ஏனெனில் வின்னர் படத்தில் ஒரு சீனில் பிகினி உடையணிந்து நடித்திருப்பார் கிரண். அதனால் ஒரு முறை கவர்ச்சியை காட்டிவிட்டால் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அதனாலேயே ஐட்டம் நடனத்திற்கு வந்ததாகவும் கூறினார். மேலும் ஜெமினி படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் அதில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும் இயக்குனர் சரண் மற்றும் ஏவிஎம் நிறுவனத்திடம் தயவுசெய்து ஜெமினி 2 படம் எடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கிரண்.

இதையும் படிங்க: தங்கச்சின்னு கூப்பிட்ட பொண்ணு கூட ஜோடியா?.. நடிக்க மறுத்த விஜயகாந்த்.. அட அவரா!..

Next Story